அப்பு: என்ன குப்பு? ரொம்ப சிரிச்சிக்கிட்டே வர!
குப்பு: ஒண்ணுமில்லண்ணே, ஏதோ நெனப்பு வந்திச்சு சிரிப்பு அடக்க முடியலே!
அப்பு: சரி குப்பு, சொல்றத சொல்லிட்டு சிரி, இல்ல, சிரிச்சுட்டு சொல்லு.
குப்பு: நம்ம எலிமெண்டரி ஸ்கூலு ராஜாராமனும், சீனிவாசனும் ரொம்ப சந்தோசமா இருக்காங்க அண்ணே.
அப்பு: அவுங்க எப்பவுமே சந்தோசமா தான இருக்காங்க, இப்ப என்ன புதுசா?
குப்பு: முன்னெல்லாம், டோனேஷன் வாங்கற பணத்துல கொஞ்சம் கமிஷன் தான் கிடைச்சுக்கிட்டு இருந்தது. இந்த வருஷம் முழு பணத்தையும் ஆட்டைய போட்டுட்டாங்க அண்ணே! அதனால தான் டபுள் சந்தோசம்.
அப்பு: புரியலையே, குப்பு, புரியும்படியா விளக்கமா சொல்லு
குப்பு: ஒண்ணுமில்லண்ணே நம்ம ஊரு லோகல் சானல்காரன், அவன்தான் வைத்தி, தன்னையும் டயம்ஸ் நௌ கணக்கா நினச்சிக்கிட்டு அந்த ஸ்கூல்ல டொனேஷன் வாங்கற வீடியோவ போட்டு மூணு நாள் அசத்திட்டான். இது ஊர் பூரா பரவவும், அந்த ஸ்கூல் ஓனர் அது தான் நம்ம ஜகன்னாதன் "எனக்கும் அந்த ஸ்கூலுக்கும் சம்பந்தம் எதுவுமில்லைன்னு" சொல்ல அதையும், ரெண்டு நாள் உடாம டீவில போட்டுத்தள்ளிட்டான். இதுதான் சான்ஸுன்னு ராஜாராமனும், சீனிவாசனும், ஆமாம், ஆமாம், ஜகன்னாதனுக்கும் ஸ்கூலுக்கும் சம்பந்தமில்ல, நாங்களும் பணம் ஒண்ணும் வாங்கலான்னு சொல்லி, மொத்த பணத்தையும் ஆட்டைய போட்டுட்டாங்கண்ணே!
அப்பு: இதெல்லாம் பாத்துக்கிட்டு ஜகந்நாதன் சும்மா விட்டுருவாரா?
குப்பு: அவுரு என்னண்ணே பண்ண முடியும். அவுரு என்ன ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வா? கூட்டணி ஆட்சி எம்.பியா? மினிஸ்டரா? குறைஞ்சது ஒரு வட்டம், மாவட்டமா. ஜீரோண்ணே! ஜீரோ! ஒண்ணுமில்லண்ணே, டீச்சரா இருந்து, ராத்திரி பகலா ட்யூஷன் எடுத்து சம்பாதிச்சவரு, கொஞ்சம் கூட ஆசைப்பட்டுட்டாரு. அடிச்சது யோகம் ராஜாராமனுக்கும், சீனிவாசனுக்கும். ஆசைப்பட்டாரு ஜகன்னாதன், ஆட்டையப் போட்டாங்க ராஜாவும், சீனியும்.
No comments:
Post a Comment