சுதந்திர தினத்திலிருந்து பிள்ளையார் பெருவிழா வரை, தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வரிசையாகக்கண்டால் கொண்டாட்டம் தான். நடிகைகளின் பேட்டியாக இருந்தால் இரண்டே விதிகள் தான். சிவப்பு நிறத்தில் பளிச்சிட வேண்டும். தமிழ் பேசுவதில் தடுமாற்றம் இருக்க வேண்டும். கேரள நாட்டு குமரிகளிலிருந்து சூரத்தைச் சேர்ந்த நமீதா வரை எல்லோருக்கும் ஓகே. போகிற போக்கைப்பார்த்தால் எதிர்காலத்தில் தமிழ்த் திருவிழாவிலும் கொண்டாட்டம் தமிழ் பேசத்தெரியாத சிவப்பு நிறக்குமரிகளுடன்தான் இருக்கும்.
இவையெல்லாம் அதிகம் எந்த அலை வரிசையில் என்று கேட்கிறீர்களா? தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் பாதுகாப்பதற்காகவே, பிறப்பு எடுத்து, தன் வாழ் நாளில் பெரும் பகுதியை அதன் முயற்சியிலேயே, அர்ப்பணித்து, நெஞ்சுக்கு நீதி தேடும் தமிழ்த் தலைவர்கள் சார்ந்த அலைவரிசைகள்.
அது போகட்டும். ஆறுதலுக்கு, உயர்திரு.சாலமன் பாப்பையா, மற்றும் அவருடன் ஐந்தாறு உண்மைத் தமிழர்கள். தமிழ்த் தெளிவாகவும், வலுவாகவும் பேசுபவர்கள். வாழ்க சாலமன் அய்யா மற்றும் அவர் தம் குழுவினர்.
வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது சிவப்பு நிற தமிழ் பேசாத தமிழ்த்திறைப்பட அழகிகளாக இருக்கட்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள், தமிழ் இன பாதுகாவலர்கள்.
No comments:
Post a Comment