Sunday, August 2, 2009

உயர் சமூகம், அதன் கேடு கெட்ட உறுப்பினர்கள் 3

சென்னை என்றால், மெரீனா பீச்சு, வள்ளுவர் கோட்டம், அடையார் பாம்புப் பண்ணை, இது போன்று பல. இருபது வருடங்களாக இதோடு இணைந்தது மற்றும் ஒன்று. சரவணா பவனில் சுவையான டிஃபன், சாப்பாடு. முப்பது வருடங்களுக்கு முன்னர் பாண்டிய நாட்டிலிருந்து சென்னை வந்து, சிறு சிறு வேலைகள் செய்து, ஓட்டல் தொழில் துவங்கி, அதை உலக அளவில் உயர் ஒரு நிறுவனமாக உருவாக்கியவர் திரு.இராஜகோபால். பெரும் சாதனையாளர். இன்று அவர் எங்கே?
பக்தி என்ற போர்வையில் மூட நம்பிக்கையில் ஊறி, ஒன்றுக்கும் மேலாக திருமணம் செய்து, அதுவும் போதாமல், மாற்றான் மனைவிமேல் ஆசை கொண்டு, அவள் கிடைக்காமல், ஆட்கள் அனுப்பி அப்பெண்மணியின் கணவனை கொள்ளத்துணிந்தான். பத்து வருடம் சிறை தண்டனை பெற்று, ஜாமீனில் வெளி வந்தான். மறுபடியும் வாதாடினால் தண்டனை காலம் குறையும் என்று கணக்குப் போட்டான். ஆயுள் தண்டனை என்றவுடன் அழுது அரற்றினான்.
கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் அவர்தம் அருமை மகன் அமெரிக்க விசா விவகாரத்தில் கைது செய்யப்பட்டான். அப்பன் எவ்வழி அருமை மகன் அவ்வழி. என்ன ஒரு குடும்பம்? என்ன ஒரு குடும்ப கவுரவம் மற்றும் பெருமை?
ஒழுக்கம் இழந்தவன் நல்வாழ்க்கையை இழப்பான்.
வள்ளுவர் சரியாகச் சொன்னார்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்

No comments: