பார்லிமென்ட் களை கட்டி விட்டது. மாறனும், மதுரை வீரனும் ஒரே குழுவில். தம் உயர் கொள்கைகளுக்காக, அவற்றை நிலை நாட்டுவதற்காக இவ்வுயர் தமிழ்த் தலைவர்கள் எந்த ஒரு தியாகமும் செய்வார்கள். அவர்கள் நினைவில் ஆழந்து நிலைத்திருப்பது, நாட்டின் நலனும், அதில் அவர்கள் பங்கு மற்றும் தான். அதற்காகவே தான் இருவரும் ஒன்று இணைந்து தாய் நாட்டின் தலை நகரில் செங்கோல் ஆட்சியில் அமரச் சென்று விட்டார்கள்.
இருவரும் இனி அடிக்கடி சந்தித்து, மதுரை மாநகரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அநியாயத்துக்கு நீதி தேடுவார்கள். கொலையாளிகளை கூண்டில் ஏற்றுவார்கள். கொலையுண்டவரின் குடும்பம் மாறனுக்கும், மதுரை வீரனுக்கும் நன்றி கூறும்.
வாழ்க மாறனும், மதுரை வீரனும்! செத்தொழிக கொலை செய்தவர்களும், அதைத் தூண்டியவர்களும், மற்றும் அதன் காரண கர்த்தாக்களும்!
காத்திருக்கிறோம், செங்கோல் மன்னர்களே! நீதி வழுவா தலைவர்களே! நெஞ்சுக்கு எப்பொழுதும் நீதி தேடும் தமிழினத்தலைவனின் குடும்பக்கொழுந்துகளே! சீக்கிரம் மதுரை வந்து வழங்குங்கையா நீதி.
செத்து ஒழிந்தது சாமானியத் தமிழனாக இருந்தாலும், வளர்வது தலைவனின் பிறப்புகளாக இருக்கட்டும்!
No comments:
Post a Comment