Sunday, August 9, 2009

அப்பு குப்பு உரையாடல் 9

குப்பு: அது சரி அண்ணே! இப்ப அவுரு மகன எதுக்கு போலீசு அரெஸ்டு பண்ணாங்க? ஒடம்பு சைசு ஒரு முழு ரோடு ரோலர் மாதிரி இருந்தாலும், பாவம் அண்ணே மூஞ்சியப்ப் பாத்தா பாலு குடிக்கிற பச்சப் புள்ள மாதிரி இருக்கு அண்ணே.
அப்பு: மொதல்ல அவுரு மகன் சரப்ஜோத் சிங்க போலீசு அரெஸ்ட் பண்ணல. அரெஸ்ட் பண்ணது சி.பி.ஐ. இன்னமும் சி.பி.ஐ. னா ஒரு மரியாதை உண்டு. அதுக்காகத்தான் லோக்கல்ல ஏதாவது தப்பு தண்டா, உள்ளூர் அரசியல்வாதி சதி பண்ணிடுவான்னா கேசை சி.பி.ஐ. கிட்ட குடு அப்படீங்கறாங்க.
பூனால பாடீல்னு ஒருத்தன். பெரிய கான்ட்ராக்டர். பெரிய தகிடுதத்தம். அவன் ஒண்ணும் நேர்மையானவனா தெரியல. ஆனாலும் அவன் செஞ்சதா சொல்லப்படற ஊழல ஈடு கட்ட, அஞ்சு கோடி குடு, பத்து கோடி குடுன்னதும் அரண்டுட்டான். கை விரல நீட்டிட்டான். பூட்டா சிங்கோட மகன், சரப்ஜோத் சிங் கையும் கலுவுமா பிடி பட்டுட்டான்.
அப்பா பூட்டா சிங்கு, நீ சொன்ன மாதிரி தான், என் பிள்ளை அறியா பிள்ளை. கை விரல குடுத்த கூட கடிக்கத்தெரியாது. பிற்படுத்த சமூகத்தினருக்காக நான் பலானது பலானதெல்லாம் செஞ்சிருக்கேன். இதப்பிடிக்காமோ அரசியல் சதி பண்ணிட்டாங்கன்னு, இருட்டுல போன சின்னப்புள்ள, பேயு பேயுன்னு பயந்து போயு அலறுமே, அது மாதிரி அரட்டுராறு பாவம். மோர சூடா குடுத்தா பயம் கொஞ்சம் தணியும்.
அதுக்கு மேல இருக்கு விழயம். கேளு. இந்த லஞ்சப்பணம் பேச்சு வார்த்தை எல்லாம் பூட்ட சிங்கோட ஆஃபீஸ் போன்ல நடந்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு. ஆனா பாவம், அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது. சரப்ஜோத் சிங் வீட்டுல, துப்பாக்கியும் குண்டுகளும் பிடிபட்டிருக்கு. லைசென்சு இல்லேன்னு குற்றச்சாட்டு, ஆனா அப்பனுக்கும், பச்சப்பிள்ளைக்கும் ஒண்ணுமே தெரியாது.
அப்ப சொல்றாரு அரசியல் சதி. செத்தாலும் சாவேனே தவிர பதவியை ராஜினாமா பண்ண மாட்டேங்கறாரு. சொன்னத செய்யுங்க அண்ணாச்சி. நாங்க யாரும் வருத்தப்பட மாட்டோம். மாறா பூமி அன்னை மேல வேண்டாத வெயிட்டு கொஞ்சம் கொறஞ்சுதுன்னு சந்தோஷப்படரவங்க கண்டிப்பா இருப்பாங்க.
வாழ்க இந்தியா! ஒழிக ஊழல் கலாச்சாரம்!

No comments: