Thursday, August 27, 2009

ஸ்வைன் ஃப்ளூ என்றால் பயம் ஏன்?

தலைப்பைப் பார்த்து ஸ்வைன் ஃப்ளூ பாதுகாப்பு அது இதுன்னு எழுதி போரடிக்கப்போறேன்னு நினைக்காதீங்க. ஸ்வைன் என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தம் பாரத்தால் புரியும், ஸ்வைன் என்பது, பருமனான {அதாவது கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட} உடலுடன், குள்ளமான கால்கள் கொண்ட தாவர உணவும், மாமிச உணவும் உண்ணும் ஒரு பிராணி. மிருகம் என்றும் சொல்லலாம்.


இந்த ஃப்ளூ இந்தியர்களை ஓரளவு தாக்கலாம். ஆனால் பெருமளவு தாக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்று கேட்கிறீர்களா? மற்றொரு பிராணி, அதாவது மிருகம், நம்மை, அதாவது இந்தியாவில் வாழும் இந்தியர்களை, நமது தேசம் விடுதலை பெற்ற தினத்திலிருந்து தாக்கி இன்னல் செய்கிறது. அதற்கு இரண்டு பெயர்கள் உண்டு.


ஒன்று ஊழல் அரசு அதிகாரிகள், மற்றொன்று ஊழல் அரசியல்வாதிகள். ஊழல் அரசு அதிகாரிகள், ஸ்வைனுக்கு இணையாக நெஞ்சடைப்பை வர வைப்பார்கள். விழுந்து செத்த்தாலும் பாக்கெட்டை காலி செய்யத் தயங்க மாட்டார்கள். நேரடியகத்தாக்குவார்கள். இவர்கள் கிட்டத்தட்ட எல்லா அரசு நிறுவனங்களிலும் நிறைந்து இருப்பார்கள். அந்த அலுவலகத்தில் உங்களுக்கு வேலை இருந்து அங்கு நுழைந்தால் இந்த மனித ஸ்வைன் ஃப்ளுவால் பாதிக்கப்படுவது நிச்சயம். நேர்மையான அதிகாரிகள் ஒதுக்கப்படுவார்கள்.


ஊழல் அரசியல்வாதி, வித்தியாசமானவன். தாக்குவதற்கு நம்மிடம் ஒப்புதல் வாங்கி விடுவான். அதற்குப் பெயர் ஓட்டு. ஓட்டு பசப்பியும் வாங்குவான். பணம் கொடுத்தும் வாங்குவான்.


இந்த ஊழல்வாதிகளால் அறுபத்தி இரண்டு வருடங்களாக நோய் வாய்ப்பட்ட இந்தியனுக்கு வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் ஸ்வைன் ஃப்ளூ ஜுஜூபி!

No comments: