தருமம் என்பதன் அர்த்தம் தெரியாதவன் தர்ம பால் யாதவ். அரசியல்வாதி என்கின்றன போர்வையில், அநியாயம் பல புரியும், ஆயிரங்களில் ஒருவன். காஜியாபாத் நகரில் கள்ளச்சாராயத்தில் துவங்கியது இவன் முறை கேடான வாழ்க்கைப் பயணம். இதில் இவனுக்கு குருவாக இருந்தவன், மகேந்திர சிங் பாட்டி என்பவன். பின்னர் அவனுக்கே விரோதியாகி அவனையே கொன்று தீர்த்தான். ஹரியானா மாநிலத்தில், இவனுடைய கள்ளச்சாராய விநியோகத்தில் இறந்தவர் எண்ணிக்கை முன்னூற்றி ஐம்பத்து.
கொலைக்குற்றங்கள், கொலை வெறித் தாக்குதல்கள், பண ஈட்டுக்காக கடத்தல்கள், தேச விரோதக் குற்றங்கள் என்று இவன் மீது இருக்கும் வழக்குகள் இருபத்தி ஐந்துக்கும் மேலாக உள்ளன. இவை அனைத்தும் அவனுக்கு முழு நேர அரசியல்வாதியாக, உயர் நிலை தகுதிகளாயின. பின்னர், உத்திர பிரதேசத்தில் பி.ஜெ.பி. அரசால் கைது செய்யப்பட்டான். இதன் உச்சம் என்னவென்றால், சில வருடங்களுக்குப் பிறகு, அதே பி.ஜெ.பி. யினால் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தான். பத்திரிக்கை உலக எதிர்ப்புக்கும், மக்கள் எதிர்ப்புக்கும் அசைந்து அவன் பதவி விலக்கப்பட்டான்.
இவன் சார்ந்துள்ள கட்சியின் பெயர், சமாஜ்வாதிக் கட்சி. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு பஞ்சாயத்துத் துறை அமைச்சரானான். இக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ். அமிதாப் பச்சன் நண்பர் அமர் சிங்கும் இக்கட்சியை சேர்ந்தவர். ஜெயா பச்சன் ராஜ்ய சபா உறுப்பினர். ஜெயப்பிரதா பார்லிமெண்டு உறுப்பினர்.
சரி. டி.பி.யாதவுக்கு வருவோம். இந்த ஈனமான அப்பனின் கேடு கெட்ட பிள்ளை விகாஸ் யாதவ் உயர் வகுப்பு கொலை வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவன். முதல் கொலை நான் ஏற்கனவே எழுதிய ஜெஸ்ஸிகா லால் கொலை வழக்கு. இதில் முக்கிய கொலையாளி மனு ஷர்மாவுக்குத் துணை போனவன். இக்கேடு கெட்ட பிள்ளையின் ஈனமான அப்ப்பன், பெரும் உதவி செய்தான், தண்டனையிலிருந்து தப்பிக்க.
டி.பி.யாதவுக்கு ஒரு பெண் பாரதி யாதவ். இவள் நிதிஷ் கட்டாரா என்பவனை காதலித்தாள். இதை விரும்பாத, விகாஸ் யாதவ் தன் ஒன்று விட்ட சகோதரன் விஷால் யாதவுடன் இணைந்து, நிதிஷ் கட்டாராவை, ஒரு திருமண விழாவிலிருந்து கடத்திச்சென்று மண்டையை உடைத்து, கொலை செய்தான். பின்னர் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தான். அவனுடைய கொலை வாக்கு மூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறான்.
No comments:
Post a Comment