Tuesday, September 11, 2012

எதிர்காலத்தில் நாத்திகம் - ஒரு கற்பனை 2

சென்ற வருடம் ........................ சில துளிகளுடன்:

அதில்லடா. பெரியார் சாமி இந்த பூமில . வே. ராமசாமி நாயக்கரா அவதரித்த போது நாத்திக மதம்னு ஒரு மதத்த ஆரம்பிச்சாரு. அந்த மதத்துல இருந்தவங்களுக்கு, சில கடுமையான விதிகள் இருந்துச்சு. கருப்பு சட்ட போடணும், கருப்பு துண்டு போர்த்தனும், நெத்தில விபூதி, குங்குமம் இதெல்லாம் இடக்கூடாது. பெண்கள் கல்யாணம் ஆனாலும், ஐயற கூப்பிட்டு, ஹோமம் வளக்கறது, தாலி கட்டறது இதெல்லாம் கூடாது.


கல்யாணத்துல பின்ன வேற என்னம்மா செய்வாங்க?


அதுவா! பெரியார் சாமியோட பக்தர் யாரையாவது கூப்பிட்டு அவர் தலைமையில கல்யாணத்த நடத்துவாங்க. அந்த பக்தரும், ஒரு அரை மணி நேரம் பார்ப்பன வசவுப்பேச்சு, கடவுள் இல்லை பேச்சு பேசி கல்யாணத்தை முடித்துக் கொடுப்பார்.


ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருக்கு - இன்னும் சொல்லுங்க அம்மா


தலைக்கு மேல வேல இருக்குடா. அடுத்த ஞாயித்திக்கிழம மத்தியானம் வீட்ல தான இருப்ப, அப்ப சொல்றேன். . . . ... தொடர்கிறது:


பெரியார் சாமி, சமுதாய சீர்திருத்தவாதி. சமுதாயத்தில அப்பா இருந்த ஜாதி வேறுபாடுகள், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்கின்றன வேறுபாடுகள், ஒருவரை ஒருவர் இழிவு படுத்தியும், அழித்தும் வாழ்வதை தடுத்து நிறுத்த ஜெஸ்டிஸ் பார்ட்டி என்று ஒரு கட்சி ஆரம்பித்தார். அதன் சின்னம் 'தராசு'. எலெக்ஷன்ல நின்னு ஆட்சியப் பிடிக்க அவர் விரும்பல. அத ஒரு சமுதாய சீர்திருத்த நிறுவனமாகவே நினைத்தார். பின்னர் அதன் பெயர், திராவிடர் கழகம் என்று மாற்றப்பட்டது.


சரிம்மா! பெரியார் சாமி, சாமியாரா? அரசியல்வாதியா? கடவுளின் அவதாரமா? இல்ல இந்த எதுவுமே இல்லையே?


மொதல்ல அவுரு சாமியார் இல்ல. ஏன்னா அவரோட மதமே நாத்திக, அதாவது கடவுளை நம்பாதவர்களோட மதம்.


ரொம்ப கனஃபியூஸ் பண்றம்மா! ராசாமணி சாமிய கேட்டா, பெரியார் சாமியும், மணியம்மை அம்மனும் தான் எங்க சாமிங்கங்கறான்.

No comments: