சச்சின் டெண்டுல்கர்
தன்னடக்கமா? ஆணவமா?
'சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஒய்வு எப்பொழுது பெறுவார்?' என்னும் கேள்வி நம்மிடையே பலநாட்களாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று இவ்விஷயத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் இம்ரான் கானும் தன எண்ணங்களைப் பிரதிபலித்தார்.
ஆனால் இதுவரை, சச்சின் தன எண்ணங்களை முழுமையாக வெளியிடவில்லை. அவர் நினைத்திருக்கலாம், நான் ஆட்டத்தில் தொடர்வதற்கு எந்த விதமான சமாதானமும், நியாயமும் யாருக்கும் தர வேண்டியதில்லையென்று.
அவர் நிலையிலிருந்து அவர் சரிதான் என்பது அவர் எண்ணமாக இருக்கலாம். எனினும் பொதுமக்கள் சார்ந்திருக்கும் எந்த ஒரு துறையிலும், அவர்களின் எண்ணங்களைக் கேட்பதும், அவற்றிற்கு நியாயமான முறையில் பதிலளிப்பதும் அவர்களின் பொறுப்பு. இப்பொறுப்பிலிருந்து விலகினால் அது அம்மக்களை அலட்சியப்படுத்துவதாகிறது. தனி மனித ஆணவச் செயலாகிறது. பொதுவாக தன்னடக்கத்துடன் செயல்படும் சச்சின் இவ்விஷயத்தில் ஆணவமாகத்தான் செயல்படுகிறார் என்பது என் எண்ணம். இது ஒரு புறமிருக்கட்டும்.
சென்ற வருடம் சச்சின் தன குடும்பத்துடன் சுமார் நாற்பது கோடி ரூபாய்கள் பெறுமான பாந்த்ரா வீட்டில் குடி புகுந்தார். சிக்கல் என்னவென்றால், அவர் மும்பை பெருநகராட்சியிடமிருந்து அவ்வீட்டில் புகுந்து தங்குவதற்கான அத்தாட்சிப் பெற்றிருக்கவில்லை. அதற்காக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது, மற்றும் தண்டத்தொகை செலுத்தகூறி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
அனில் கால்கலி என்பவர் ஒரு RTI Activist. அவர் அறிய விரும்பினார்: முழு தண்டத்தொகையும் பெருநகராட்சியால் பெறப்பட்டு விட்டதா இல்லையா என்று.. ஆனால் சச்சின் RTI சட்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய ஓட்டையின் வழியே வெளி வந்து, அவ்விஷயம் வெளியடப் படுவதை தடுத்து விட்டார். மேலே படியுங்கள் உண்மையை.
However, a senior official attached to the chief information commissioner (CIC)'s office was surprised with the BMC's reason for denying the information. "A fine collected from a citizen is public money and an individual can seek information on this under the RTI Act," he said.
RTI activists from Mumbai echoed the view. "Citizens have every right to know the amount of fine imposed and recovered by the BMC from Tendulkar for violating civic norms. The BMC cannot deny the information to the applicant just because it involves a celebrity like Tendulkar," said Bhaskar Prabhu, convenor of the Mahiti Adhikar Manch. This manch is a group of RTI activists and applicants who create awareness about the RTI Act and take up issues that are in the public interest.
இதற்கிடையே சச்சின் இப்பொழுது ராஜ்ய சபா உறுப்பினரும் ஆகிவிட்டார் எனவே இவ்விஷயத்தில் அவர் பொறுப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆனால் அவர் பொறுப்பாகச் செயல் படவில்லை என்பது என் எண்ணம். சொல்லுங்கள் நண்பர்களே! சச்சினின் செயல் தன்னடக்கச் செயலா? ஆணவச்செயலா?
No comments:
Post a Comment