பகுத்தறிவு வியாபாரம்
நாற்பது - ஐம்பது வருடங்களுக்கு முன்னாள் இம்மக்களின், பகுத்தறிவு வியாபாரமும், சாதி வித்தியாச வியாபாரமும், மொழி வெறுப்பு வியாபாரமும் சூடு பிடித்தது. வியாபாரம் தமிழ் மக்களின் அறியாமையின் ஆதாரத்தில் வெகுவாக வளர்ந்தது.
இடை இடையே பார்ப்பன வெறுப்பும், ஹிந்தி வெறுப்பும் முன் நிறுத்தப்பட்டன. ஒரு சரியான வியாபார தந்திரம். பார்ப்பன நண்பனுடன் தோள் மேல் கை போட்டு நடந்தவன், திடீரென்று திராவிட உணர்வு கொண்டு, பூணூல் அறுப்பிலும், ராமர் உருவச்சிலைக்கு செருப்பு மாலை போடுவதிலும் பெருமிதம் கொண்டான்.
பதவி, பணம், புகழ் பெற்றவன் அண்ணன் தம்பி, மச்சான், மச்சினிச்சி எல்லார் பெயரிலும் சொத்து சேர்த்தான். தொண்டனாகவே இருந்து வீணாப்போனாவன் குடும்பக் கடமைகளை மறந்து, கடமை மறந்த கணவானாகவும், பொறுப்பற்ற பிள்ளையாகவும், அப்பனாகவும் செத்து மடிந்தான். சாகும் வரை, தலைவன் வாழ்க, கூறி குடும்பம் ஒழியக்காரணமானான்.
தொண்டர்கள் மடிந்தார்கள். தலைவர்கள் இன்று மாறி விட்டார்கள். பகுத்தறிவு வியாபாரம் இன்று செல்லு படியாகவில்லை. காரணம். விஞ்ஞான வளர்ச்சி. கம்ப்யுட்டர் டெக்னாலஜி சாதாரண தமிழன் வாழ்க்கையை வளப்படுத்தி விட்டது. கூடவே விலை வாசி உயர்ந்து விட்டது. வாழ்க்கையில் கவலைகள் அதிகரித்து விட்டன. கோவில்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. சாதிகளை ஒட்டிய கட்சிகள் போலவே சாதிகளை ஒட்டிய கோவில்களும் பெருகி விட்டன.
விளைவு! இன்று அதிக அளவில் பார்க்கப்படும் தமிழ் டி.வி. சானல்கள், முக்கியமாக பகுத்தறிவுத் தலைவர்கள் நடத்தும் சன், மற்றும் கலைஞர், மூட நம்பிககையும், பக்தி என்ற பெயரில் அறிவை மழுங்க அடிக்கும் நிகழ்ச்சிகளை சீரியல்கள் மூலம் பரப்புவதை அப்பப்பா - தாங்க முடியவில்லை.

சன் டி.வி. யும், கலைஞர் டி.வி. யும் கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள், மூட நம்பிக்கை உருவாக்கி, பரப்பி, வளர்ப்பதில். ஒரு சீரியலில் நாயகி வெளியே போகிறாள், பூனை குறுக்கே வருகிறது. மனதில் சஞ்சலம். மற்றோன்டில் நாயகி கடவுளிடம் வேண்டிக்கொள்கிறாள் மனமுருக, அம்மனின் தலையிலிருந்து பூ விழுகிறது. நாயகி. தவறாமல் வாரம் ஒரு முறை யாராவது ஒருவர் அல்லது ஒருத்தி சோதிடம் கேட்கப்போவதும், துன்பம் தன்னை அண்டாமல் இருப்பதற்கு பரிகாரம் செய்வதும் வெகுவாகப் பார்க்கலாம்.
வாழ்க தமிழ்! வளர்க அவர்தம் அறியாமை! இதில் தான் இருக்கிறது திராவிடத் தலைவர்களின் அன்றாட வருமானம்.

1 comment:
எப்படி ஆத்திகர்கள் அற உணர்வையும் ஆன்மிகத்தையும் பிரித்துவிட்டர்களோ...
Post a Comment