கிணத்தில், குளத்தில், கடலில் பிள்ளையார்
கணபதி பப்பா மோரியாஎன பாட்டிசைப்போம் - நம்
காதுகளைப் பற்றி கரணம் போடுவோம்
கஜானனம் என்றுநாம் துதித்திடுவோம் - தினம்
கணேசன் கால்களைப் பணிந்து வேண்டிடுவோம்
பூசைதினங்கள் முடிந்ததும் புறப்படுவோம் - ஆம்
கிணத்தை, குளத்தை, கடலை நோக்கி
விட்டெறிந்து மகிழ்வுடன்வீடு திரும்புவோம் - பாவம்
விரைவாக அள்ளப்படுவார் விநாயகர்
வெளிறிய உடைசலாக வண்டிகள்கொண்டு - நஷ்டம்
உனக்கென்ன பக்தனேபாடு கணபதிபப்பா மோரியாஎன்று!
No comments:
Post a Comment