நோபெல் பரிசு ஒரு தமிழருக்குக் கெடச்சிருக்கே, நீங்க என்ன நெனைக்கிறீங்க அண்ணாச்சி?
ரொம்ப சந்தோசமான விஷயம் தான். இந்த நியூச பாத்த உடனே ரொம்ப சந்தோசமா இருந்திச்சு. ரெண்டு நாளைக்குப பொறகு ஒபாமாவுக்கு நோபெல் அமைதி பரிசு குடுத்து இருக்காங்கன்னதும் மனசுக்கு சங்கடமா போச்சு தம்பி.
ஏங்க அண்ணே? ஒபாமாவும் பெரிய மனுசரு தானே அண்ணே?
அது ஒண்ணுமில்லடா, அன்னை தெரசாவுக்கும், அதுக்கு அப்பால மைக் ஒபாமாவுக்கும் அதே விருதுன்னா மனசு ஒப்ப மாட்டேங்குது.
என்னே! இதெல்லாம் பெரிய பெரிய ஆளுங்க கோம்மிட்டீல கூடி தான முடிவு பண்ணுவாங்க, அதேப்படின்னே தப்பாகும்.
அதெல்லாம் வாஸ்தவம் தான். ஆனா நோபெல் பரிசு ஒண்ணும் சந்தேகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் அப்பாற் பட்டதல்ல. கடந்த அம்பது, அறுபது வருடங்கள்ள பல தவறுகள் நடந்திருப்பதா பெரிய பெரிய ஆளுங்களே நெனைக்கறாங்க. அது போகட்டும். அமைதின்னா உனக்கு யார் பேர் மொதல்ல ஞாபகம் வரும்.
அமைதின்னா, அஹிம்ச - அஹிம்சன்னா அண்ணல் காந்தி அடிகள்.
அவுரு பேர அஞ்சு முறை நாமிநேட்டு பண்ணி குடுக்காம வுட்டாங்க. கடைசியா அண்ணல் காந்தி அடிகள் சுட்டுக்கொல்லப் பட்டத்துக்கு ரெண்டு நாள் கழிச்சு முடிவு பண்றதா இருந்தாங்க. கிட்டத்தட்ட அவுரு பேரு முடிவு ஆயிடிச்சு . ஆனா இறந்தவருக்கு நோபெல் பரிசு இல்லன்னு கதைய மூடி அந்த வருஷம் யாருக்குமே தரல.
ஆச்சரியமா இருக்கு அண்ணே!
இதுல என்னடா இருக்கு ஆச்சரியம்! எல்லாமே மனுசங்க தானடா. மனித குலம் முதிர்ச்சி அடைய இன்னும் பல நூறாண்டுகள் ஆகணும்டா.

No comments:
Post a Comment