Thursday, November 26, 2009

பாவம் கோடா! விழுந்தது கோடாலி!

இந்த மது கோடா ரொம்ப பாவம் அண்ணாச்சி! ஊரு உலகத்துல யாரு பண்ணாத தப்ப பண்ணிப்புட்டாறு? அவுரு மேல இம்புட்டு கேசு போட்டு அவுர இம்ச பண்றாங்க!


என்னடா இது? நீ எதுவும் அவுரு கிட்ட கமிஷன் கிமிஷன் வாங்கி போட்டுட்டயா?


மது கோடா எனக்கு எதுக்கு அண்ணாச்சி கமிஷன் குடுப்பான். குடுக்க வேண்டியவங்களுக்கு சரியா குடுக்கலயோன்னு தான் அண்ணாச்சி சந்தேகம் வருது.


என்னடா ஒளர்ற! அவன் கமிஷன் குடுக்காம தான் மாத்திக்கிட்டான்னு சொல்றியா!



நான் என்னண்ணே சொல்றது. பாத்தாலே புரியுதுண்ணே. ஒரு விஷயம் சொல்லுவாங்க அண்ணே. கைல கத்திய வச்சிக்கிட்டு பயமுறுத்தர வரைக்கும் தான், பவரு, வருமானம், தல மேல போட்டு வெட்டிட்டா அப்புறம் சிக்கல்தான்னு.


என்னடா சொல்ற புரியலையே.


ரொம்ப சுளுவுன்னே. மெட்ராஸ் பாஷையில சொல்லணும்னா, ஊடு கட்டிக்கிட்டே இருந்தா தான் நம்ம கையிலே கன்ட்ரோலு இருக்கும். பாருங்க, பேர சொல்ல வேண்டாம், ஒரு ஆளு கொஞ்சம் ராங்கா சைடு உதார மாதிரி தெரிஞ்சிச்சு. உடனே அங்க இங்கன்னு ரெய்டு உட்டு, சைடு கரெக்டு பண்ணிட்டாங்கல்ல.


நீ என்ன சொல்ல வர?


நான் என்ன சொல்றேன்னா, மது கோடா கணக்கா பேமானிங்க, இந்திய அரசியல்ல ஆயிரக்கணக்கா இருக்காங்க. நான் மொதல்ல சொன்ன மாறி, மாத்த ரெண்டு சட்ட இல்லாம ஊர வுட்டு பொழப்பு தேடி நகரத்துக்கு வந்தவங்க புள்ளைங்க இப்ப ஃபாரின்ல படிக்குதுங்க. சொத்து ரெண்டு கோடின்னு கணக்கு காட்டறான். என்னோட கேள்வி, அந்த ரெண்டு கோடி கூட எங்கேருந்து வந்திச்சுங்கரதுதான். பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு, நேர்மையான, புத்திசாலியான மக்க, மாசத்துக்கு இருபது முப்பதாயரம் சம்பாதிக்கரதுக்குள்ள டங்குவாரு அறுந்து போவுது. இப்படி இருக்கயில எலிமெண்டரி ஸ்கூலு தாண்டாம, பத்து பைசா இல்லாமா, என்ன வேல பாத்து, என்ன தொழில் பண்ணி இவுனுங்க கோடில பொரளுறானுங்க. எனக்கு புரியலண்ணே, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. அத நம்ம எலெக்ஷன் கமிஷன், இன்கம் டாக்சு, எல்லாம் எப்டி ஒத்துக்குது?


மது கோடா மட்டுமில்ல, இப்ப நம்ம நாட்டுல, பாதி அரசியல் வியாபாரிங்க, மது கோடாவுக்கு கொஞ்சமும் கொரஞ்சவுங்க இல்ல. ரூல சரியா போட்டு வலைய ஒழுங்கா விரிச்சா, மவனே ஒரு பய தப்ப மாட்டான். முடியாதா! மது கோடா ஒரு ஆளு என்ன பாவம் செஞ்சான். அவுனையும் மன்னிச்சு வுட்டுருங்கோ.








Sunday, November 15, 2009

மது கோடாவின்


யாரிடம் சென்று முறையிடுவது

கலைஞர் கருணாநிதி, எக்காலமும் நெஞ்சுக்கு நீதி தேடும், பகுத்தறிவுப் பாசறையின் தானைத்தலைவர், புலம்பித் தவிக்கிறார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 'யாரிடம் சென்று முறையிடுவது'? என்று. நல்ல கேள்வி, அய்யா, நல்ல கேள்வி. யாரிடம் சென்று முறையிடுவது?



ஆனால் இந்த கேள்வியும் அதனுடன் கூடிய புலம்பலும், தங்கள் அரசின் கையாலாகாத் தனத்தைத் தான் தெளிவாகத் தெரிவிக்கிறது. இது போன்ற விஷயங்களில், நியாயமும், தெளிவான தொலை நோக்குப் பார்வையும் அவசியம் தேவை.



நியாயம் அல்லது நீதி என்ற சொல்லுக்கு உங்கள் அகராதியில் என்ன பொருள்? எதுவெல்லாம் பதவிகளைத் தக்க வைக்கின்றனவோ, எதுவெல்லொம் தங்கள் எல்லா மனைவிகளின் எல்லா செல்வங்களுக்கும் செல்வம் சேர்க்க வழி அமைக்கின்றனவோ, அவர்கள் மட்டுமல்லாது மற்றும் பல உறவினர்களுக்கும், பதவிகள், அதனுடன் சேரும் செல்வங்கள் சேர்க்க வழி செர்க்கின்றனவோ அவைகளே நீதிகள், நியாயங்கள். மறந்து விடாதீர்கள் கலைஞரே! சில மாதங்களுக்கு முன், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பதவிகள் வேண்டி பிரதமர் முன் மண்டியிடுவதில் மும்முரமாக இருந்த பொழுது இலங்கையில் பல்லாயிரம் தமிழர்கள் இதையே தான் கேட்டார்கள் - "யாரிடம் சென்று முறையிடுவது? தமிழனின் காவலர்கள் என்று பறை சாற்றுபவர்கள் பதவிகளுக்காக மண்டியிட்டு நிற்கும்போது, நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது என்று. இன்று இப்பொழுது இது உங்கள் முறை. ஆனால் உங்கள் புலம்பலுக்கு ஒரு அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.


தொலை நோக்குப் பார்வை. தொலை நோக்குப் பார்வை உங்களுக்கு நிச்சயம் உண்டு. எந்த விஷயங்களில் என்பது தான் கேள்வி. தங்களைப் போலவே பகுத்தறிவுப் பாசறையில் பிறந்து, தங்கள் காலத்தையும், முயற்சிகளையும், ஒரு எண்ணத்தொகுப்பின் மையமாக வைத்து, ஒரு சமுதாயக் குறிக்கோளுடன் தியாகங்கள் பல செய்து, அதற்கு ஈடாக எதுவுமே பெறாத பற்பல சிந்தனையாளர்கள், செயல் வீரர்கள் இருந்து இருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்கள் தொலை நோக்கு வெறும் இயக்கமும், சமுதாயம் சார்ந்ததுவாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் உங்கள் தொலை நோக்கோ பறந்து விரிந்த குடும்பம் சார்ந்தது. அந்த வகையில் நீங்கள் ஒரு சாதனையாளர்தான்.



இன்றைய புலம்பல் ஒரு ஆரம்பம் தான். கையாலாகாத்தனத்தின் ஒரு சிறிய வெளிப்பாடு. காலம் உருள உருள, உங்கள் வயது ஏற ஏற, கையாலாகாத்தனங்கள், அதற்குண்டான நிலைமைகள் மேலும் வளரும். உங்கள் தம் புலம்பல்களின் பெருக்கங்களுடன், நெஞ்சுக்கு நீதி ஒரு நாள் நிச்சயம் கிட்டும். நெஞ்சுக்கு நீதி கிடைக்கும் வரை நீண்ட வாழ்வு நீங்கள் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Thursday, November 12, 2009

தகுதியான இடத்துக்குத் திரும்பினான் மனு ஷர்மா

கண்ணா! நேத்து ஜெயிலுக்கு திரும்பிப் போறதுக்கு முன்னாடி மனு அவன் அம்மாவுக்கு உருக்கமா கடிதம் எழுதியிருக்கான் பாத்தியா?


என்னம்மா எழுதியிருக்கான்?



நான் எந்த தப்பும் பண்ணல, நீங்க என்ன நம்புங்கம்மான்னு! படிக்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குடா.


நீங்க எதுக்கும்மா மனசு கஷ்டப்படறீங்க?


அப்பாவியா இருப்பானோன்னு மனசு சங்கடப்படுதுப்பா? காந்தி கூட சொல்லியிருக்காரு, நூறு குத்த்தவாளி தப்பிச்சாலும், குத்தம் செய்யாதவன் யாரும் தண்டிக்கப்படக்கூடாதுன்னு.


இந்தியாவுல ஒரு நிதர்சன உண்மைய புரிஞ்சுக்கோம்மா.
  • ஒரு ஏழைக்குத்தவாளி நிச்சயம் பிடிபடுவான் மற்றும் தண்டிக்கப்படுவான்
  • ஒரு ஏழை குத்தம் செய்யாமலும் சந்தர்ப்ப வசத்தால் பிடிபடலாம், தண்டிக்கப்படலாம்
  • ஒரு பணக்கார குத்தவாளி பெரும்பாலும் பிடிபடாமலே போகலாம்.
  • ஒரு பணக்கார குத்தவாளி பிடிபட்டாலும் பெரும்பாலும் தண்டிக்கப்படாமல் போகலாம்.
  • ஒரு பணக்காரன் குத்தம் செய்யாமலே பிடிபடவோ, தண்டிக்கப்படவோ வாய்ப்போ இல்லை.
  • அதுவும் அரசியல்வாதியின் பிள்ளை, இந்த குற்றத்தில் மாட்டி தவிர்க்க முடியாமல் உள்ளே போனான்னா, இதுக்கு முன்னே பற்பல குற்றங்கள் செய்து, கண்டுபிடிக்கப்படாமலே அல்லது, தண்டிக்கப்படாமலே போயிருப்பான். இது சத்தியம்.



Tuesday, November 10, 2009

உயர் சமூகம், அதன் கேடுகெட்ட உறுப்பினர்கள்

மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுதியது:

வினோத் ஷர்மா என்பவன் ஒரு முன்னாள் ஹரியானா மாநில அமைச்சர். அவனோட தறுதலை பிள்ளை மனு ஷர்மா. நண்பர்களுடன் உயர் விலை கார்களில் ஊர் சுற்றுவதும், நாளையும் இரவையும், மதுவுடனும், தரம் கெட்ட மாதர்களுடனும் போக்குவதுதான் இது போன்ற பல உயர் வகுப்பு, பொருளாதாரத்தில் உயர் வகுப்பு தருதலைப்பிள்ளைகளின் பொழுதுபோக்கு.




அது போன்றே ஒரு இரவு திரிந்து அலைந்தவன், ஜெச்சிக்கா லால் என்பவளை சுட்டுக்கொன்றான். அவனுடன் கூடவே இருந்தனர் அமரீந்தர் சிங், அவனுடைய நண்பன் ஆலோக் கன்னா மற்றும் விகாஸ் யாதவ். இதில் விகாஸ் யாதவ் என்பவன் உத்தர் பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு ராஜ்ய சபா உறுப்பினரின் தறுதலை மகன்.




இக்கொலைக்கு பிறகு, வேறு வழியில்லாமல் மனு போலீசில் சரணடைந்தான். கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தான். பின்னர் தனக்கும் ஜெஸ்ஸிகா லால் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றான். தருதலைப்பிள்ளையின் தரம் கெட்ட அப்பன் சாட்சியங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தான். பிடி பட்டான். தன் அமைச்சர் பதவியை விட்டு விலகினான்.



கொலையாளிக்கு வாதாட விலை உயர் சட்ட நிபுணர்கள். அவனுக்காக வாதாடியது மட்டுமல்லாமல் தரம் கெட்டு பதப்பித் திரிந்தார்கள். மக்கள் முட்டாள்கள் என்றனர். குற்றத்தை திசை திருப்ப முயற்சித்தனர். கேடு கெட்ட காவலர்கள் துணை போனார்கள்.



ஷயன் முன்ஷி என்பவன் கொல்கத்தாவில் ஒரு கண்மருத்துவரின் மகன். உயர் தர பள்ளிகளில் பயின்றவன். கொலையை நேரில் பார்த்தவன். முதலில் பார்த்ததாகச்சொன்னவன், பிறகு மாற்றி மாற்றி பேசினான். பெண்டாட்டியுடன் நாட்டை விட்டு தப்பி ஓட முயன்றான். விமான மையத்தில் பிடி பட்டான்.



காவலர்கள் சோரம் போனார்கள். வழக்கறிஞர்கள் உண்மை அதாவது அன்னையை விற்கத் துணிந்தார்கள், காசுக்காக. நீதிபதிகள் தடுமாறினார்கள். பதவிகளில் இருப்பவர்களின் அதிகாரத்திற்கு பயந்தார்கள். மக்களும், பத்திரிக்கை உலகமும் வெகுண்டு எழுந்தனர். மனு ஷர்மா ஆயுள் தண்டனை பெற்றான். அவன் நண்பர்கள், கொலைக்கு உடந்தையானவர்கள் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.



வினோத் ஷர்மா, தருதலைப்பிள்ளையின் கேடு கெட்ட தந்தை இன்னமும் அரசியல் வியாபாரம் பண்ணிக்கொண்டுதானிருப்பான் என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் எதுவும் சாத்தியம்.

Monday, November 9, 2009

பாரோலில் வெளி வந்தான் கொலைகாரன்

கொலை காரன் மனு ஷர்மா இரண்டு மாத பாரோலில் வெளியே வந்தான். காரணம் அவன் தாய் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.


அவள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது இப்பொழுது அல்ல என்பது அவளது சனிக்கிழமை வீடியோ படத்தைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான ஓட்டலில் ஒரு பிரெஸ் கானஃபிரென்ஸில் மிகவும் தெம்பாகக் கலந்து கொன்டிருந்திருக்கிறாள்.



பின்னே அவள் நோய் வாய்ப்பட்டிருந்தது எப்போது? ரொம்ப சுலபான பதில். அவள் நோய் வாய்ப்பட்டிருந்தது கொலைகாரன் மனு ஷர்மாவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தபோது. அந்த ஒன்பது மாதங்கள் அவள் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தாள். எதிர்காலக் கொலைகாரனை, ஒரு சட்ட விரோதியை வயிற்றில் சுமப்பது என்பது கடுமையான வியாதி அல்லவா.



செய்த பாவங்கள் போதாது என்று மேலும் பாவங்கள் செய்ய வெளி வந்திருக்கிறான், பொய் பாரோலில். ஒரு கொலைகாரப் பாவியை வயிற்றில் சுமந்ததற்காக அந்த தாய் சமீப காலங்களில் ஒரு கேடு கெட்ட கொலைகாரனைப் பெற்ற குற்றத்தோடு துயர வாழ்க்கை வாழ்வது உண்மை. இதற்கு மேலும் அவன் குற்றம் செய்தால், அத்தாயே அவனை செய்யத்தூண்டினால், அவளுக்கு வரக்கூடிய துயரம் மிக அதிக அளவில் இருக்கும். அது இயற்கையின் நியதி. அதை யாராலும் தவிர்க்க முடியாது.


ஷீலா தீக்ஷித் போன்றவர்கள் அதற்க்குத்துணை போனால் அவர்களும் பெரும் துயரத்தில் ஆழ்வது அவசியம். இது ஜோசியம் அல்ல. கொலையுண்டவளின் தாயின் வயிற்றெரிச்சல் அவர்களை சிதைக்காமல் விடாது. புராணங்களிலும், இதிகாசங்களிலும், இதற்கான உதாரணங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன.

Sunday, November 8, 2009

செத்தது மடிந்தது தமிழின உணர்வு

கடல் கடந்து சென்றான் தமிழன் கனவுகளுடன்
கால மாலை பார்க்காது உழைத்தான் வயிறு கழுவ
தாய் மண்ணை மறந்து, சென்ற இடம் தன்னிடமாக்கி
தான் தமிழன் என்று மறவாது, தமிழ் மட்டும் பேசி
அந்நிய மண்ணில் தமிழ் தழைக்க விரும்பினான்



மணம் முடித்து, குழந்தைகள் பல பெற்று வளங்கள்
மனம்போல் பெற்றான் பற்பல - பொறுக்காத சிங்களவன்
பாவங்கள் பல புரிந்தான், தமிழ் மாதர் தம் குலத்தை
பரிதவிக்க விட்டு காட்டாட்ச்சி நடத்தினான்.


ராஜபக்சே என்னும் கொடுங்கோலாளன் தருணம்
பார்த்து அரங்கேற்றினான் ஒரு நாடகத்தை
விடுதலைப் புலிகளை முடிக்கிறேன் என்ற பெயரில்
நடத்தி முடித்தான் தமிழ் குல வேரறுப்புச் செயல்


தமிழ்க் குலக் காவலெரன, நாள் தோறும் மேடை போட்டு தன்மானத் திரையில் நாடகம் போட்டு ஏமாற்றினார்கள் தமிழ் நாட்டுத் தமிழ் தலைவர்கள்.


குளிர்சாதனப் பெட்டிகளும், ஒன்றுக்கும் மேலான துணைவியாரும் சுற்றிருக்க சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்குமிடையே உண்ணா நோன்பு இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளில் வியாபாரம் செய்தார்கள்


கூடிய விரைவில் எதிர் பாருங்கள், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தமிழ் நாட்டில் அண்ணா விருது, பெரியார் விருது போல், கலைஞர் விருது கொடுத்து விழா எடுப்பார்கள். தமிழனுக்கு எதையும், எந்த கண்றாவியையும் தாங்கும் இதயம் உண்டு.

Friday, November 6, 2009

தலை விதி - இறந்தார்

சுமித் பிரகாஷ் வர்மா, அவரோட தலை விதி, ஆஸ்பத்திரிக்குள்ள போறதுக்குள்ள செத்துட்டாரு. அதுக்கு மன்மோகன் அண்ணாச்சி என்ன பண்ணுவாரு பாவம்? எதுக்கு தான் தலைவருங்கள குத்தம் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு!


விஷயம் ஒரு உயிர் போனது மட்டுமில்ல தம்பி. இன்னிக்கு இந்த வி.வி.ஐ.பி ங்களுக்காக, ஊரு ஊரா எவ்வளவு தடபுடல் நடக்குது, சாதாரண மனுஷங்களுக்கு எம்புட்டு சிரமம் னு யாருமே கவலை படறதில்ல. ஒனக்கென்ன, மாசம் பொறந்தா சம்பளம். தினம் தினம், நடந்தும், சைக்கிள்ளையும் போயி, அன்னாடம் சம்பாதிக்கரவங்கள நெனச்சு பாரு. இந்தியாவுல அது மாதிரி கோடிக்கணக்குல மக்கள் இருக்காங்க. அவனவன் டயத்துக்கு போயி வேல பாக்குலென்ன அன்னிக்கு ராத்திரி அவுங்க வூட்டுல எல்லோரும், அந்த ஒரு ராத்திரி சாப்பாடு கூட இல்லாம வவுறு காய வேண்டியது தான். ஊர்ல ஒரு தலைவன் வர்ரான்னா மொதல்ல அடிபடறது அந்த சாமானியனோட குடும்பத்துல இருக்கர்வுங்களோட வவுருதான். இதில என்ன வேடிக்கைன்னா அந்த சாமானியனோட ஓட்ட வாங்கித்தான், வெங்கங்கெட்டவனுங்க பதவிக்கே வரானுங்க.



தெருவுல, போற வர அரசாங்க பஸ்சு மேல, போராட்டங்கிற பேருல கல்லு வுட்ட பேமானி, அரசியல்ல பூந்து, தலைவரானதும், மக்கள் வரிப்பணத்த வள்ளலு மாதிரி எடுத்து ஊதுவான். தம்மானத்த வுட்டு, வயசு வித்தியாசம் கூட பாக்காம பன்னாடைங்க அவன் கால்ல வுளுந்து மோச்சம் கேக்கும். அவுனும் எடுத்து வுடுவான், சரி புடி, இந்த பதவிய, அந்த பதவியன்னு. அதோட நிக்கிதா, நேத்துவர சும்மா சோடா பாட்டுலும், சைக்கிள் செயினும் சுத்திக்கிட்டிருந்த பொறம்போக்கு, வி.வி.ஐ.பி. ஆவுறான். அவுனுக்கு பின்னாடி ஒரு போலீசு கூட்டம். ஒரு காலத்துல பல குத்தங்கள்ள அவன கைது பண்ண தேடிக்கிட்டிருந்த போலீசு, அவுனுக்கு பின்னே போயி அவுனுக்கு பாதுகாப்பு குடுக்குது. செலவுக்கு மக்களோட வரிப்பணம்.




மக்களோட வரிப்பணம்னதும், வெறும் வருமான வரி, அது ரொம்ப சம்பாதிக்கறவங்க தானே கட்டுறாங்க, நமக்கு என்ன ஆச்சுன்னு நெனைக்காத. அரிசி, பருப்புன்னு ஒவ்வொரு சாமான் நாம வாங்கரபோதும், நேரிடையாவோ, மறைமுகமாவோ வரி கட்டிக்கினு தான் இருக்கோம். இந்த வரியெல்லாம், இவுனங்களுக்கு பாதுகாப்பு குடுக்கவும், வளவு கட்டி வரவேற்பு குடுக்கவும், செலவாகுது. இவுனங்களுக்கு ஆகர ஆடம்பர செலவுல நம்ம ஒவ்வோத்தரோட ஒளைப்புல சம்பாதிச்ச பணமும் இருக்கு.

லட்சத்தில் ஒருவன்

அண்ணே! பாவம்ணே மது கோடா!


யாருடா, மது கோடா?? ஏன் அவனுக்காக பரிதாபப்படறே?


அதாண்ணே, முன்னால ஜார்கண்டுல மினிஸ்டராவும், அப்பால சீஃப் மினிஸ்டராவும் இருந்து இப்ப வயித்து வலி தாங்க முடியாம ஆஸ்பத்திரில இருக்காரே அண்ணே!


வயித்த்துவலின்னா ட்ரீட்மெண்டு குடுத்துடுவாங்க, அதுக்கு ஏன்டா பாவம், கீவம் னுகிட்டு.


அதுல்லண்ணே, ஹவாலா ஹிவாலான்னு இந்த சி.பி.ஐ. காரங்க உள்ள தள்ளிடுவாங்க போல இருக்குன்னே. அதனால காட்டியும், அவுருக்கு வயித்து வலி வந்திடிச்சு.



சரிடா, இந்த அளவுக்கு ஊழல் பண்ணியிருந்தா ஒரு நாள் இல்ல ஒரு நாள் மாட்டிக்க வேண்டியது தானே. இதுக்கென்னடா நீ பரிதாபப்படறே?


அதில்லண்ணே! இந்தியால எவ்ளோ பேரு இருக்காங்க. லட்சக்கணக்குல இருக்கும்ணே. ஒரு சின்ன பொட்டில ரெண்டு மாத்து டிரெஸ்ஸு கூட இல்லாம டவுன் பக்கம் வந்து, கூட்டத்தோட கல்லு உட்டு அடிச்சு, சாலை மறியல் பண்ணி, அரசியல்ல சேந்து, இப்ப மொத்த குடும்பமுமே, மாமா, மச்சான் சகல, கொளுந்தனாருன்னு எல்லாருமே கோடிகள்ள பொறண்டுகிட்டு இருக்காங்கன்னே. ஒவ்வொரு ஸ்டேட்டுலையும் கணக்கெடுத்த பல ஆயிரம் தேரும்ணே. அவுங்களையெல்லாம் தலைவர்கள்னு ஒத்துக்குட்டோம். அவுங்க மக்கள் வரிப்பணத்துல குடுக்கற அரிசிக்கும், கோதுமைக்கும், கலர் டி.வி.க்கும் கால்ல விழுந்து கும்பிடு போடறோம். இதெல்லாம் வாங்கிக்கிட்டு ஒட்டுகள விக்கிறோம். ஒரு கோடா ஏன்னா பொளச்சு போறாண்ணே. அவன் லட்சத்திலு ஒத்தண்ணே! பாக்கி தொண்ணூத்தி ஒம்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஒம்பெது பேரையும் அவுங்க மாமா, மச்சான், சகலங்களோட, கோளிய அமுக்கற மாதிரி அமுக்கி உள்ள தள்ளுனா, ரொம்ப சந்தோசப்படுவேன். இல்லாட்டி ஒரு கோடா என்னாண்ணே, பெரிய பெரிய ஜுஜுபில்லாம் அசால்ட்ட சுத்திக் கிட்டு இருக்காங்கண்ணே. ஆனா ஒரு விஷயம், ஊழல் பண்ற அரசியல் வாதி எல்லாரையும் ஒண்ணா அடைக்கறதுக்கு ஒரு திஹார் ஜெயில் பத்தாது.


Monday, November 2, 2009

வன்முறை இயக்கங்களின் கை ஓங்கல்

சென்ற வாரத்தொடர்ச்சி...........
"Self Motivation" அல்லது வலுவான "Motives" இன் ஆதாரத்தைப் பார்ப்போம். இதில் இணைவர்களில் பெரும்பாலோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையின் அன்றாடப் போராட்டங்களை நேரில் எதிர் நோக்கி வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள். படிப்பறிவையும், செயல் திறனையும் கொண்டு வாழ்க்கையில் பெரிய சாதனைகள் படைக்கத் துடிப்பவர்கள். இத்துடிப்புக்கு இடையே எது சரி, எது தவறு நியாயம், அநியாயம் என்ற விஷயங்கள், பெரும்பாலும் பெற்றோர்களால் பெருமளவு போதிக்கப்பட்டு, அவர்கள் கட்டுப் பாட்டில் வளர்பவர்கள். அவர்கள் சிந்தனைகளில் என்றும் ஆழ்ந்து வேரூன்றி இருப்பது, இது சரியா, தவறா, இது நியாயமா, அநியாயமா என்பதே. இந்த எண்ண அலைகளில் வேரூன்றி, அவர்கள் மனம் மிகவும் திடமாகவும், அதே சமயம் கடினமாகவும் ஆகிப் போகிறது.
தங்கள் கண்கள் முன்னே நடக்கும், அநியாயச்செயல்களைக் காணும்போது நெஞ்சம் பதைக்கிறது. பெரும்பான்மையான மக்கள் கண்டும் காணாதது போல் போகும்போது, அந்த பதைபதைப்பு வெறுப்பாகவும், மெல்ல மெல்ல வெறியாகவும் உருப்பெறுகிறது.
1960 களில் வந்த ஹிந்தி படம். மனோஜ் குமார் இயக்கி நடித்தது. அதில் அவர் பாடுவார்:
आदमी हूँ आदमी से प्यार करता हूँ! என்றும், அதாவது நான் மனிதன், மனித குலத்தை நேசிக்கிறேன் - மேலும் பாடுவார்: मै बसाना चाहता हूँ, स्वर्ग धरती पर, आदमी जिसमें रहे बस आदमी बनकर - அதாவது நான் இவ்வுலகத்தில் சொர்க்கத்தை படைக்க விரும்புகிறேன், அதில் மனிதன் மனிதனாக இருக்க விரும்பி.
இந்த எண்ணம் தான் ஆரம்பம். ஆனால் பெருவாரியான மக்கள், நெஞ்சில் உரமுமின்றி, சிந்தனைத்திறனுமின்றி, பம்மாத்து செய்து திரியும்போது வேதனை வெறியாகிறது. அப்பொழுது அவன் நினைப்பது:
"உன்னை வெறுக்கிறேன் நான்! ஏனென்று கேள் - நம் இனத்தை அளவுக்கு அதிகமாக காதலிப்பதால்"! இது ஒரு சிறிய ஆரம்பம்.

Wednesday, October 28, 2009

வன்முறை இயக்கங்களின் கை ஓங்கல்

கடந்த இரண்டு வருடங்களில், இந்தியாவில் பற்பல வன்முறை இயக்கங்களின் கைகள் ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் பிறப்பு, பரிணாம வளர்ச்சி, எதிர்கால நிலை, இவற்றை உற்று நோக்கினோமானால், மிஞ்சுவது, இயலாமையும் அச்சமுமாகவே இருக்கும்.


ப.சிதம்பரம் சொன்னார், ஒரு கூட்டத்தில், மேற்படிப்பு படிக்க வழி இல்லாதவர்கள் நாக்சல் இயக்கத்தில் இணைந்து கொள்கிறார்கள் என்று. இது ஒரு கலப்பட மில்லாத பிதற்றல். விட்டுத்தள்ளுங்கள். உள்துறை அமைச்சர் பொறுப்பில் அவர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நாக்சளைட்டுகள், மாவோவிச்டுகள் மற்றும் இது போன்ற அமைப்புகளின், வேரமைப்பு, (வேரமைப்பு என்றால், எங்கு, ஏன், எப்படி ஆரம்பமாகிறது) ஊட்டச்சத்து, (ஊட்டச்சத்து என்பதில் இரு வகை - உள்ளூருவது - அதாவது ஆங்கிலத்தில் 'SELF MOTIVATION' என்றோ, அல்லது சுருக்கமாக 'BASIC MOTIVES' என்றோ சொல்லலாம், அது அளிக்கும் ஊக்கம், வெளியிலிருந்து கொணர்வது, அதாவது 'OUTSIDE INSPIRATION'. 'OUTSIDE INSPIRATION' இரண்டு வகை. 'ACTIVE' - அவர்கள் வெகுவாக மதிக்கும் மனிதர்களிடமிருந்து வரும் ஊக்கமான பேச்சுகள் , மற்றும் செயல்கள், 'PASSIVE' - நாட்டில் தொடர்ந்து ஏற்படும் சமூக மீறல்கள், அநீதிகள் மற்றும், அத்து மீறல்கள், இவற்றையெல்லாம் பற்றி, வெகு ஆழமாக, விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.



இந்த 'PASSIV INSPIRATION' தருபவர்கள் சமூகக் குற்றங்களைத் தொழிலாகக்கொண்டவர்கள், அரசு அலுவல்களில் வேலை செய்து கொண்டே அராஜகம் செய்பவர்கள், மற்றும் அரசியலைத் தொழிலாகக் கொண்ட அநீதியாளர்கள். இந்த மூன்று குழுக்களில், கடைசியாகச் சொல்வது, அதாவது அரசியலைத் தொழிலாகக் கொண்ட அநீதியாளர்கள், இவர்களின் கை மிகவும் மேலோங்கியது. ஏனென்றால் அவர்களுக்கு, நேரிடையாகவும், மற்ற இரண்டு குழுக்களின் அநீதிகளிலும், ஊழல் செயல்பாடுகளிலும் சம உரிமை, பெரும்பாலும் அதிக உரிமை பெற்றவர்கள்.


'MOTIVES' மற்றும் 'INSPIRATION FROM THEIR LEADERS' படித்த, அறிவு சார்ந்த, ஊக்கமும், உற்சாகமும் நிரம்பப் பெற்ற இளைஞர் சமுதாயத்தை இக்கழகங்களின் திசையில் இழுக்கின்றன. ஆனால், கேடு கெட்ட ஊழல் அரசு அதிகாரிகள், குறிப்பாக காவல் துறையின் அத்து மீறல்கள், உரிமை மீறல்கள், அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகள், பதவிகளுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம், பதவிகள் கிடைத்தபிறகு குற்றச்சுவர்களை இடித்து சாய்க்கலாம் என்ற இறுமாப்பு, நடவடிக்கைகள், இவ்வியக்கங்களைச் சார்ந்தவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. இவற்றை வெறும் பேச்சு வார்த்தைகளாலோ, ஆயுத பலத்தாலோ முறியடிக்க முடியாது. மாற்றத்திற்கு வேண்டியவை:

௧. சமுதாய மாற்றங்கள்
௨. சமுதாயத்தின் நிதி நிலை மாற்றங்கள்
௩. அரசியலமைப்பில் மாற்றங்கள்
௪. நீதித்துறையில் மாற்றங்கள்

என்று பல விதமான மாற்றங்கள் தேவை. இந்த மாற்றங்களை எப்படி, யார் கொண்டு வர வேண்டும்? இல்லாவிடில் எதிர்காலம் எப்படி தோற்றமளிக்கும் , மேலும் சிந்திப்போம் ...................... சந்திப்போம்.

ராஜா கைய வச்சான்

ராஜா கைய வச்சான்! அது ராங்கா போனதில்லே!


என்னடா, காலங்காத்தால பாட்டுப் பாடி கலக்க ஆரம்பிச்சிட்டே?


சும்மா, இந்த பாட்டு ரொம்ப நாளைக்கு அப்பறம் ஞாபகம் வந்திச்சு, எடுத்து வுட்டேன் அண்ணே!


அது சரிடா, இந்த பாட்டு ஏன் உனக்கு ஞாபகம் வந்திச்சு? எந்த ராஜாவைப் பத்தி ஞாபகம் வந்திச்சு? பட்டி மன்றம் ராஜாவா? பெருந்துறை ஆள்கடத்தல் கேசு ராஜாவா? இல்ல தினம் தினம், உடாம உடும்புப்புடியா தப்பு ஒண்ணும் நடக்கல, கீழ்மட்டத்துல தப்பு நடந்திருந்தா சி.பி.ஐ. தன் வேளையைச்செய்யும்னு, பரிதாபமா பதில் சொல்லிக்கிட்டு இருக்காரே சென்ட்ரல் மினிஸ்டரு ராஜாவா?


குறிப்பா யாரைப்பத்தியும் பாடலேண்ணே. ஆனா நேத்து திடீர்னு ராஜா கைதாவாரான்னு படிச்ச வொடனே திக்குன்னு ஆயிடிச்சு. என்னடா இது, டில்லி மாநகரத்துல ராசா சம்பத்தப்பட்ட ஆஃபீஸுங்கள்ள சி.பி.ஐ. ரெய்டு நடந்துருக்கு. அடுத்த நாள் தினமலர் பேப்பரைத் தொறந்தா, ராஜா கைதாவாரா ன்னு படிச்சதும் திக்குன்னு ஆயிடிச்சு அண்ணே!



அர வேக்காடு! எதையும் முழுசா படிச்சுப் பாக்க வேண்டாம்.


படிச்சப்பறம் தான்னே தெரிஞ்சுது, இவுரு வேற ராஜா, ஆள் கடத்தல் ராஜா. பெருந்துறை ராஜான்னு. ஏண்ணே? எனக்கு ஒரு விஷயம் புரியலண்ணே. இந்த ஆள்கடத்தல் கேசு ராஜா, பல வருஷம் பார்டில இருந்திருக்கிறாரு. அவுங்க அப்பாவும் கட்ச்சிக்காரரு. கட்சில பதவிகள்ல இருந்திருக்காரு. ஒரு காலத்துல மினிஸ்டராவும் இருந்திருக்காரு. எப்படின்னே திடீர்னு இப்படி ஆயிப் போச்சு?



அது தாண்டா பாலிடிக்சு! பல தடவைல கிறுக்குத்தனமா மாட்டிக்கிட்டா குத்தவாளி! சாமர்த்தியமா தப்பிச்சிக்கிட்ட, மினிஸ்டரு, சீஃப் மினிஸ்டரு, ப்ரைம் மினிஸ்டரு, என்ன வேணும்னாலும் ஆகலாம். அது பேரு தாண்டா டெமோக்ரஸி.

வாழ்க இந்தியா! வளர்க அதன் ஜனநாயகம்! ஒழிக கிரிமினல்கள் நாயகம்!
ஜெய் ஹிந்த்!

Sunday, October 25, 2009

எதிர்க்கட்சிங்க மட்டும் தோக்கல

அண்ணாச்சி! மஹாராஷ்டிரத்திலயும், அருணாச்சலப் பிரதேசத்திலயும், மக்கள் எதிர் கட்சிகள எப்படி தோக்கடிச்சுட்டாங்க பாத்தீங்களா?


தோத்தது எதிர்கட்சிங்கதான்! ஆனால் அவுங்க கூடவே மக்களையும் தோக்கடிச்சுட்டாங்க!


புரியலீங்கண்ணே! மக்கள் எப்படித் தோத்தாங்க?





இப்ப இருக்கற மத்திய காங்கிரஸ் கவர்ன்மேண்டப் பத்தி நீ என்ன நெனக்கிறே?


நல்ல கவர்ன்மேண்டு தானேண்ணே!


என்னடா நல்ல கவர்ன்மேண்டு? எத்த வச்சு சொல்ற? ஆரம்பத்துல சிங்கு அய்யாக்கிட்ட கேட்டப்போ "இவ்வளவு, கிரிமினல் கேசு இருக்கறவங்களோடல்லாம், நீங்க கூட்டு வச்சிருக்கீங்களேன்னு" கேட்டப்போ "என்ன பண்றது? ஆட்சி நடத்தணுமே" ன்னு சொன்னாரு.


இப்ப நிலைமையப் பாரு! சீனா அருணாச்சலப் பிரதேச விஷயத்துல நம்மள ஓபெனா சாலேஞ்சு பண்ணுது. பாகிஸ்தான் மும்பை தாக்குதல் விவகாரத்துல நியாயமா நடக்க விரும்பற மாதிரி சுத்தமாத் தெரியல. இலங்கை ராஜ பக்சே செய்யறதெல்லாம் செஞ்சுட்டு, தமிழ் நாட்டையும், இந்தியாவையும் பாத்து கொக்கொரக்கோ ன்னு கூவறான்.


இதெல்லாம் பத்தாதுன்னு, நாட்டுக்கு உள்ளேயே, நாக்சலைட்டுகளும், மாவோவிஸ்டிகளும், இந்திய அரசுக்கு எதிரா போரறிக்கையே குடுக்குறாங்க. சரி, பார்லிமெண்டுக்குள்ள போயி பாப்போம். உள்துறை அமைச்சர், மறு எண்ணிக்கையில் ஜெயிச்சவர். உண்மை என்னன்னு சிலருக்குத் தான் தெரிஞ்சிருக்கும். ஆனா வதந்திகள் பல. நம்பவும் முடியல. முழுவதுமா நம்பாமலும் இருக்க முடியல. ஏன்னா அவுங்க கூட்டாளிங்க அப்படி. ராஜான்னு இன்னொரு மந்திரி. பல புகார்கள். மறுபடியும் புகைய ஆரம்பிச்சிருக்கு. எரிஞ்சாலும் எரியும், அப்படியே அணைஜ்சாலும் அணைஞ்சுடும். எல்லாம் அவுங்க அவுங்க அட்ஜஸ்மேன்டப் பொறுத்தது. ஜகத் ரக்ஷகன்ன்னு இன்னொருத்தருப்பா, டோனஷன் கேசு, எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சின்னப் புள்ளைங்க மாதிரி பேசி குஷாலாயிட்டாறு. அத்த வுடு, நம்ம மதுரக்காரரு, அழகிரி, அவுருக்கு என்ன அனுபவம்? கலைஞரோட மகன் என்கறது விட்டு என்ன? மொத முரையே மினிஸ்டர் ஆயிட்டாரு. இன்னும் எவ்வளோவோ சொல்லிக்கிட்டே போலாம்.



இந்த மாதிரி நேரத்துல உஷாரா ஒரு எதிர்க்கட்சி இருந்து உருப்படியா வேலை பண்ணிருந்தாங்கன்னா, எல்லா சீட்டையும், அப்படியே அள்ளியிருக்கலாம். உள்ளுக்குள்ளேயே ஒத்தொனுக்கு ஒத்தன் அடிச்சிக்கிட்டு எல்லாரும் வீணாப் போனாங்க. அதனால தம்பி தோத்தது எதிர்கட்சிகள் இல்ல. மக்கள்.


இதற்கு மேல் என்ன செய்ய முடியும்?

இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? கேட்கிறார் கனிமொழி.


புரியலீங்க அண்ணாச்சி! எதுக்கு, இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?


மரமண்டை! அதாண்டா, இலங்கை விழயத்தப்பத்தி பேசறாங்க.


ஏன்? ராஜ பக்சே கலைஞர் அப்பாக்கிட்ட கம்ப்ளைண்டு ஏதாவது செஞ்சாரா? அவுருக்கு போத்தின பொன்னாட குவாலிட்டி சரியில்ல, கிழிஞ்சு போயிருக்கு, கனிமொழி அக்கா பொன்னாட போத்தினப்ப இன்னும் நல்லா சிரிச்சு அதிகமா மகிழ்ச்சியைக் காட்டிருக்கலாம்னு.


உன்ன மரமண்டன்னு சொன்னது சரிதாண்டா! அதப்பத்தி இல்லடா. அவுங்க கேக்குறாங்க ஈழத் தமிழர்களுக்காக அவுங்க அப்ப என்னல்லாம் செஞ்சாங்க. இதுக்கு மேல என்ன செய்ய முடியும்னு.


என்னண்ணே? கனிமொழி அக்காதான் சொல்றாங்கன்னா, நீங்களும் ஜோக்கு அடிக்கறீங்கலேண்ணே!


மடையா இதுல ஜோக்கு என்னடா இருக்கு?


என்னண்ணே? கலைஞரும், கழகமும், இலங்கைத் தமிழர்களுக்காக என்னன்ன செய்தாங்கன்னு உலகம் முழுதும் எல்லாருக்கும் தெரியும்ணே.


என்னடா தெரியும்?


அதுதான், கனிமொழி அக்காவே சொல்லி இருக்காங்க ளேண்ணே! மனித சங்கிலிப் போராட்டம். பள்ளிக்கூட புள்ளைங்கள கை கோத்து நிக்க வச்சிட்டு, தலைவருங்க கார்ல போயி, அங்க அங்க நின்னு, அத ஒரு வாரம் உடாம டி.வி. ல காட்டினது. தலைவரோட நாலு மணி நேர உண்ணா விரதம். ரெண்டு மனைவி்ங்க, இரண்டு ஏ.சி. சுத்தி இருக்க, பட்டு மெத்தையில படுத்து. என்ன செய்வாங்க பாவம். அதுக்குள்ள எலெக்ஷன் வரவும், அதுக்கப்பறம், இந்த தள்ளாத வயசுல, டெல்லி போயி போராடி, பதவிகள் வாங்குனது. அதுக்கு மேல கூட்டமா போயி, கொல வெறியன் ராஜ பக்சேவ பொன்னாட போத்தி வாழ்த்தினது, ஆமாண்ணே, கலைஞர் குடும்பத்தோட தியாகங்கள நெனச்சா உடம்பு புல்லரிக்குதுணணே! இதுக்கு மேல என்னதான் செய்ய முடியும், எந்த ஒரு மனுசனும் தன் குடும்பத்துக்கு?

Thursday, October 22, 2009

தோத்துப் போனார் அருண் காவ்லி

மும்பை மாநகரத்தில் அருண் காவ்லி என்னும் ஒரு காவாலி. குற்றங்கள் பல புரிந்து பல வருடங்கள் காவலில் வைக்கப்பட்டவன். இந்த மாதிரி ஆட்களுக்கெல்லாம் போக்கிடம் எது? அரசியல் தானே. அதனால் அவன் ஒரு கட்சி ஆரம்பித்து முழு நேர அரசியல்வாதியானான். இரண்டாயிரத்து நான்காம் வருடம் 'அகில பாரதிய சேனா" என்ற அரசியல் கட்சியின் கீழ் எம்.எல்.ஏ. ஆனான்.


அரசியல்
வாதி ஆகி, சட்டசபைல இடம் புடிச்சிட்டா எவனுக்குமே பரிபூரண விமோசனம் அல்லவா கிடைச்சுடும். போலீஸ் பாதுகாப்பு உண்டு. நேரடியா அடிதடி செய்யறத சட்டசபைல மட்டும் வச்சுக்கலாம். தெருவுல அதைச்செய்ய உடன்பிறப்புகள் பல பேர் இருப்பாங்க. கொலையே செய்து மாட்டிக்கிட்டாலும், எதிர் கட்சியின் சதி என்று பழி போடலாம். கூட்டத்தைக் கூட்டி, அராஜகம் செய்து, நீதியை (அநீதியை) தனக்கு சாதகமாக்கலாம். ஆட்சி மாறினால் தான் கட்சி மாறி, குற்றங்களிலிருந்து தப்பித்து, மனித குல சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ளலாம்.


ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்மணிகளை மணம் முடிக்கலாம். அவர்கள் தம் பெண், பிள்ளைகளுக்கு, ஸ்டேட்டிலிருந்து, சென்ட்ரல் வரை பதவிகள் பல பெறலாம். மாமன், மச்சான் என்று விரிந்த குடும்பங்களுக்குப் பற்பல நன்மைகள் செய்யலாம். மொத்தத்தில் மக்கள் வரிப்பணத்தை தங்கள் குடும்பச் சொத்தாகக் கருதி, பித்தலாட்டங்கள் பல செய்து பிழைக்கலாம்.


ஆனால் இந்த முறை தோத்துப் போனார் அருண் காவ்லி. இருந்தாலுமென்ன, ஆட்சியல் அமருபவனுக்குக் கிடைப்பதில் கொஞ்சம் கமிஷன் அரசியலில் மற்றவர்களுக்கும் கிடைக்கும். அத வச்சு அடுத்த எலெக்ஷன் வரைக்கும் ஓட்டலாம்.

கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்

தினம் தினம் தமிழ் செய்தித்தாள்களில், தங்களைப் பற்றிய செய்தியோ, தாங்கள் பேசியோ பேச்சோ பதிவாகியிருக்கும். நாட்டுக்கு நலன் பயக்கும் விஷயங்கள் எதுவும் யோசித்துப் பேசுவீர்கள் என்று பார்த்தால் பெரும் ஏமாற்றம் தான். பாவம் உங்கள் சங்கடம் எங்களுக்கும் ஓரளவு புரிகிறது. தினம் தினம், அதற்கு முந்தைய தினம் ஜெயலலிதா என்ன பேசினார் என்று படித்துப் புரிந்து கொள்வதிலேயே, இந்த தள்ளாத வயதில், பெரும் நேரமும், அதிக அளவில் மனோ வலிமையையும் செலவிட வேண்டியதாக இருக்கும். அதற்கும் மேலாக தெள்ளிய தமிழில் பதிலடி அடிக்க, மேலும் யோசித்தே நாள் கடந்து விடும்.


விட்டுத்தள்ளுங்கையா ஜெயலலிதாவின் பேச்சை! உண்மையாச் சொல்றேன், நீங்க சொல்றது வச்சுத்தான், செல்வி ஜெயலலிதா என்ன பேசினாங்கன்னு தெரிய வருது. நீங்க ஜெயலலிதாவை எதிர்க்கிறீங்களா, அல்லது அவங்க பேச்சுக்கு விளம்பரம் குடுக்கறீங்களான்னே சந்தேகம் வந்துடுது.


எனவே நீங்க பாட்டுக்கு சிவனேன்னு, மன்னிக்கணும், வெங்காயமேன்னு, நெஞ்சுக்கு நீதி தேடறதிலேயே முழு நேரம் ஈடுபட்டா நல்லா இருக்கும். நீங்க உண்டு, உங்க சக்கர நாற்காலி உண்டுன்னு ஒய்வு எடுங்க. தமிழ் நாட்டுல பெரிய மாத்தம் ஒண்ணு்ம் வந்துடாது.


வாழ்க தமிழ்! வளர்க தலைவர் குடும்பம்!

Wednesday, October 21, 2009

எல்லாம் நன்றாகவே நடக்கின்றன

சுதர்சன் நாச்சியப்பனும், அருணும், தெளிவாகச்சொல்லிட்டாங்கைய்யா, எல்லாம் நல்லபடியா இருக்கு. முகாம்கள்ள இலங்கைத் தமிழ் மக்கள் வசதியா இருக்காங்க. நாங்க இதெல்லாம் பத்தி முழு ரிப்போர்ட்டு மன்மோகன் சிங்கு கிட்டயும், சோனியா அம்மாக்கிட்டயும் குடுக்கொறோம்னு சொல்லிட்டாங்க.


திரை விலகாமலே ஒரு நாடகம் நடந்தது
நடிகர்கள் மேடையில் அல்ல, பார்வையாளர் புறம்
பார்த்தார்கள், ரசித்தார்கள், பொன்னாடை போர்த்தி
பாராட்டினார்கள், கொலையாளன் குதூகலிக்க
மேடையில் ஓடிய ரத்த ஆற்றை கண்டும் காணாமல்
திரும்ப வந்து, ஈவிரக்கம் சிறிதுமின்றி பொய் வார்த்தை பேசுகிறார்கள்
கடவுளின் நாடகத்தில் இவர்கள் பாத்திரங்கள்
பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்,
பிரதமரிடமல்ல, இவர்களைப் படைத்தவனிடம்

ஊழல் செயல்களை கை விடத்தயாரா?

'நாக்சலைட்டுகள், வன்முறையை கைவிட்டு, அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வர வேண்டும்' - என மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.


சாமானிய, நாட்டுப்பற்று கொண்ட இந்தியன் கூறுகிறான் "அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், பேராசை வணிகர்களும் ஊழல் செய்வதை கைவிட்டு, நாட்டுப் பற்றுடன் நல் வழி நடக்க முன் வர வேண்டும்"


வருவார்களா? நாக்சலைட்டுகள் உருவாகவே இந்த மூணு பேர் தானய்யா காரணம்.

நெஞ்சிலடிக்கும் நீதி

கீழ்க்கண்ட வரிகள் நான் சென்ற வருடம் நவம்பர் பதினாறாம் தேதி எழுதியவை. ஒரு வருடம் முடியப்போகிறது. குற்றமிழைத்தவர்கள் தண்டனை பெற்றனரா? தெரிந்தவர்கள் தயவுசெய்து சொல்லுங்கள்

நேற்று தமிழ்நாட்டுச் செய்திகளை கேட்டு, கண்டு, நெஞ்சு கொதித்தேன். என் தமிழ் மண்ணுக்காக விம்மி அழுதேன். தமிழன்னையின் மார்பு மீது தமிழ் இளைஞர்கள் சிலரை, வேறு சில தமிழ் இளைஞர்கள் தள்ளிவிட்டு அவர்தம் நெஞ்சு மீது மிதித்தனர். இவர்கள் அனைவரும் எதிர் வரும் காலங்களில் நீதி மன்றங்களில் நின்று நீதியைப் பாதுகாப்பதற்குத தேவையான் அறிவு தேடும் அன்பு மாணவச்செல்வங்கள். கேடு கெட்ட செயல்.



சில அடிகள் தொலைவில் நமது தமிழ் நாட்டு, நாட்டு மக்களின் பாதுகாவலர்கள், கேட்டும் கேட்காதது போல், கண்டும் காணாதது போல் உயிரற்ற , உணர்வுகளற்ற அசையாப்பொருள் போல் சவ அமைதி காத்தனர். மரங்கள் இருந்திருந்தால் இலைகளை அசைத்து தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கும். நாய் இருந்திருந்தால் பாய்ந்து சென்று சிலரை கடித்திருக்கும். ஆனால் ஒரு காலத்தில் உலகத்தின் தலை சிறந்த பாதுகாவலர்களுக்கு இணையாக கருதப்பட்ட நமது தமிழ் நாட்டுப் பாதுகாவலர்கள், அந்நியனாய், அநியாயமனவனாய், கொடூரமானவனாய், கோழை கோமாளியாகி, தமிழ் நாட்டுக்கும், தமிழனுக்கும் இழுக்கு வர வைத்தனர்.



இவர்கள் இடம் மாற்றம் செய்யப்படலாம். செய்யச்சொன்னதை சரியாக செய்ததற்காக, அந்த இட மாற்றம் சரியான பரிசாகவும் இருக்கலாம். உண்மையில் அபராதமாகவும் இருக்கலாம். ஆனால் இது போதாது. இந்த அநீதியை, காட்டுமிராண்டித்தனத்தை, கல்லூரி வாயிலில் அரங்கேற்றிய மாணவர்களும், மாணவர்களல்லாத கைகூலிகள் மட்டுமன்றி, அங்கு நின்ற பாதுகாவலர்களும் கடுமையாகத் தண்டிக்கப்ப் பட வேண்டும்.



இது மட்டுமல்ல. கல்லூரியின் முதல்வர், கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும். விசாரணைகள் முடிந்து நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை தமிழ் நாட்டு முதல்வர், கலைஞர், தன் 'நெஞ்சுக்கு நீதி' எழுதுவதையும், பிரசுரம் செய்வதையும், விற்பனை செய்வதையும் முழுமையாக நிறுத்த வேண்டும்.



ஏனென்றால், தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என்று பாராட்டிப் பாராட்டிப் பின்னர், உண்மையில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை இன்று இது போன்ற நிலைக்குத் தள்ளியதில் பெரும் பங்கு இந்த திராவிடர்களின் பெயரில் ஆரம்பித்த இக்கழகங்களையே சாரும்.

Tuesday, October 20, 2009

முற்போக்கு சிந்தனை - வருடம் 2013

உங்க பையன் என்ன படிக்கிறான்?


எம்.. கருணாநிதியின் சிந்தனைகள். பிச்சு உதர்றான். ஒரு வருஷமா 'பெண் குலத்தைப் பத்தி அவரோட சிந்தனைகள், செயல்கள்' ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் கைதானபோது அவருடைய சிந்தனைகளும் செயல்களும்', அதற்கும் மேலாக 'இலங்கைத்தமிழர்களுக்கு கலைஞர் ஆற்றிய தொண்டுகள்' அப்படின்னு பல விதமா தீவிர ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான். எம்.ஏ. முது கலைப் பட்டத்தோட பி.ஹெச்.டி ஏ அவனுக்கு கெடச்சாலும் கெடச்சுடும்.


அருமை! அருமை! முக்கியமா அவன் எடுத்துக்கிட்ட தலைப்புகள் - உண்மையா சொல்றேன் உங்க பையன் அசத்திட்டான்.


அது மட்டுமா, அவரோட கடமை உணர்ச்சியப்பத்தி எழுதும்போது, அருமையான புகைப்படங்களைப் போட்டு அசத்திட்டான். முக்கியமா சொல்லணும்னா, ஏ.சி. பெட்டிகள் சூழ, மனைவிகள், மக்கட் செல்வங்கள் சூழ மெத்தையில் படுத்து சில மணி நேரங்கள் இலங்கைத்த் தமிழர்களுக்காக உண்ணா விரதம் இருந்தாரே - அது அவரது கடமை உணர்ச்சிக்குச் சான்று.



சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவி ஜெயலலிதா வுக்கு நடந்த நிகழ்ச்சி கலைஞரோட உடன்பிறப்புகளின் கண்ணியத்த எவ்வளவு தெளிவா காட்டிச்சு. கட்டுப்பாடு, ஒரே ஒரு உதாரணம் போதும். சட்டக்கல்லூரி வாசல்ல கொலை வெறிக்காட்சி அவர் ஆட்சியில நடந்த பொது, அவரோட போலீசுங்க, ஒரு அடி முன்னால வைக்காம, உணர்ச்சி வசப்படாம, எவ்வளவு கட்டுப்போடோட இருந்தாங்க.


இதெல்லாம் பாராட்டாம சில பேரு வாய்க்கு வந்த படி பேசறாங்க, எழுதறாங்க. இதுக்கெல்லாம், சாட்டையடி கொடுப்பான், என் மகன் அவோனோட ஆராய்ச்சில.




திருமாவளவன் என்று ஒரு தமிழ்த் தலைவர்

தமிழன் நான், தமிழன்பன் நான் இன்று காலை தினமலர் செய்தித்தாளைத் திறந்து இலங்கை சென்றிருக்கும் நம் தமிழ்த் தலைவர்களைப் பற்றிய செய்தி படித்ததும் மெய் சிலிர்த்தேன், புல்லரித்துப் போனேன், புளகாங்கிதம் அடைந்தேன். இன்னும் என்னென்னவோ சொல்லத் தோணுது. இத்தோட நிறுத்திக்கிட்டா தமிழ் தலைவர்களுக்கும் நல்லது. எனக்கும் ரொம்ப நல்லது.


நியூச கேளுங்க. இலங்கைத் தமிழினக் கொல்லி ராஜ பக்சே திருமாவளவன் எனும் தமிழ்த்தலைவனை ஆரத்தழுவிக்கொண்டான். மேலும் சொன்னான்:
" நீங்கள் பிரபாகரனோடு தொடர்ந்து இருந்திருந்தால் நீங்களும் அழிந்திருப்பீர்கள். நல்ல வேளையாக தப்பித்துக்கொண்டீர்கள்"



இதைக்கேட்டதும் உடனிருந்த தமிழக எம்.பி. க்கள் அச்சமடைந்தனர், என்ன நடக்குமோ என்று. ஆனால் தமிழ்த்தலைவர், தன்மானச்சிங்கம், சிறுத்தை, புலி, (காட்டு மிருகங்கள் பேர வைக்கறதுதான் இப்ப ஃபேஷன்) சிறிதும் கலங்காது, எதுவும் பேசாமல் புன்முறுவல் பூத்தார். என்னவொரு காட்சி. இந்த செய்தியை படித்த பிறகும் புல்லரிப்புப் பத்தலைன்னா வகதா.டிவில நுழைஞ்சு தானைத் தலைவன் திருமாவளவன் பேச்சை வீடியோ வில கேட்டுப் பாருங்க. இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல புல்லரிச்சுப்போயி சொறிஞ்சிக்கிட்டே இருப்பீங்க.


இதுக்கும் மேலாக எனக்கு என்னுடைய சிறு வயது நண்பன் ஞாபகம் வந்தது. அவன் எந்த ஊர் வம்புக்கும் போக மாட்டான். ரொம்ப பயந்த குணம். ஒரு நாளைக்கு ஒரு சின்ன சண்டை. எதிராளி அவன ஓங்கி அறைஞ்சிட்டான். உடனே வெகுண்டு எழுந்த என் நண்பன் "எனக்கு கோபம் வந்தா என்ன செய்வேன் தெரியுமா?" என்று கேட்கவும், நாங்கள்ளாம், பயத்தோட பாத்துக்கிட்டு இருந்தோம். ஏன்னா, என் ஃபிரெண்ட அறைஞ்சவன் ரொம்ப மொரடன். என் ஃபிரெண்டு ரொம்ப நிதானமா கன்னத்த தொடச்சிக்கிட்டு சொன்னான் "பொறுத்திக்கிட்டு போயிடுவேன்" னு. பல நாட்களுக்கு அந்த ஜோக்க நாங்க சொல்லி சிரிச்சிக்கிட்டே இருப்போம். இது இப்ப ஞாபகம் ஏன் வருதுன்னு சத்தியமா தெரியாதுங்க எனக்கு.


அரைவேக்காடு விளக்கம்

நமது இந்திய நாட்டின், உள்துறை அமைச்சர் மாண்புமிகு சிதம்பரம் அவர்கள் விருதுநகரில் நாக்சலைட்டுகள் ஏன் நாக்சலைட்டுகள் ஆகிறார்கள் என்பதற்கு அருமையான ஒரு விளக்கம் கொடுத்தார். "உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காதவர்களே நாக்சல்களாக மாறுகின்றனர்". என்னவொரு விளக்கம். அதுவும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரிடமிருந்து.



பாகிஸ்தானிய நாச வேலைக்காரர்கள் மும்பையில் ஊடுருவி நாச வேலை செய்த பிறகு, சிதம்பரம் உள்துறை அமைச்சரானதில் மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சமீப காலங்களில் நடக்கும், உள்நாட்டு மாவோவிஸ்டுகளின் மற்றும் நாக்சலைட்டுகளின் அட்டகாசங்களைப் பார்க்கும்பொழுதும், மற்றும் அதற்கு பதிலாக சிதம்பரம் அவர்கள் பேசும் பேச்சை கேட்கும்பொழுது விரக்திதான் மிஞ்சுகிறது. நல்ல ஒரு நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள், ஒரு திறமையற்ற உள்துறை அமைச்சராக மாற்றம் பெற்றுவிட்டாரோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இந்த அச்சத்திற்கு ஊட்டம் அளிப்பது போல் இருக்கிறது விருது நகரில் அவர் தெரிவித்த கருத்து.



நாக்சல்பாரி இயக்கம் என்பது நாட்டின் சுதந்திரக் கோட்பாடுகளுக்கு பல முறைகளில் இன்னல் வகுக்கும் ஒரு மிகப்பெரிய அமைப்பு அது. அவர்களின் நாச வேலைகளை எதிர் கொள்வதற்கு அழ்ந்த அறிவும், நீண்ட சிந்தனையும், தொடரும் செயல் திட்டங்களும், மற்றும் உயர்ந்த கோட்பாடுகளும் தேவை. இது போன்ற ஒரு வரி அரைவேக்காடு விளக்கம், அதுவும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரிடமிருந்து வருவது மிகவும் வருந்தத்தக்கது. இது அவர்தம் இயலாமையை தெளிவாகத் தெரிவிக்கிறது.

Saturday, October 17, 2009

செத்து மடிந்தது தமிழ் இன உணர்வு

கடல் கடந்து சென்றான் தமிழன் கனவுகளுடன்
கால மாலை பார்க்காது உழைத்தான் வயிறு கழுவ
தாய் மண்ணை மறந்து, சென்ற இடம் தன்னிடமாக்கி
தான் தமிழன் என்று மறவாது, தமிழ் மட்டும் பேசி
அந்நிய மண்ணில் தமிழ் தழைக்க விரும்பினான்



மணம் முடித்து, குழந்தைகள் பல பெற்று வளங்கள்
மனம்போல் பெற்றான் பற்பல - பொறுக்காத சிங்களவன்
பாவங்கள் பல புரிந்தான், தமிழ் மாதர் தம் குலத்தை
பரிதவிக்க விட்டு காட்டாட்ச்சி நடத்தினான்.


ராஜபக்சே என்னும் கொடுங்கோலாளன் தருணம்
பார்த்து அரங்கேற்றினான் ஒரு நாடகத்தை
விடுதலைப் புலிகளை முடிக்கிறேன் என்ற பெயரில்
நடத்தி முடித்தான் தமிழ் குல வேரறுப்புச் செயல்


தமிழ்க் குலக் காவலெரன, நாள் தோறும் மேடை போட்டு தன்மானத் திரையில் நாடகம் போட்டு ஏமாற்றினார்கள் தமிழ் நாட்டுத் தமிழ் தலைவர்கள்.


குளிர்சாதனப் பெட்டிகளும், ஒன்றுக்கும் மேலான துணைவியாரும் சுற்றிருக்க சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்குமிடையே உண்ணா நோன்பு இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளில் வியாபாரம் செய்தார்கள்


கூடிய விரைவில் எதிர் பாருங்கள், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தமிழ் நாட்டில் அண்ணா விருது, பெரியார் விருது போல், கலைஞர் விருது கொடுத்து விழா எடுப்பார்கள். தமிழனுக்கு எதையும், எந்த கண்றாவியையும் தாங்கும் இதயம் உண்டு.

Wednesday, October 14, 2009

சாயம் வெளுத்தது


இலங்கை - இலங்கையில் தலைமாநகரத்தில் ஒரு கண் கொள்ளாக் காட்சி. தமிழனத்தலைவர்கள், இலங்கை சென்றதற்கான காரணம் ஒரு புகைப்படைத்த பார்த்த மாத்திரத்தில் தெளிவாகப் புரிந்தது.


தமிழ்க் காவலர், தமிழினக்காவலர், நெஞ்சுக்கு எக்காலமும் நீதி தேடிக்கொண்டே இருப்பவரின், நேரடி மேற்பார்வையில், இலங்கை சென்ற தமிழினத் தலைவர்கள், கொடுங்கோலன் ராஜபக்சேவை நேரில் பார்த்து நீதி கேட்டார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் ஒரு இலட்ச்சத்திற்கும் அதிகமான தமிழின உயிர்களை கொன்று குவித்ததுக்குப் பாராட்டாக, ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார்கள். ஆரத்தழுவி இன்புற்றார்கள்.


தமிழனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். யாருக்கு என்ன வந்தது? உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக பரவி இருக்கும் தமிழினம் செத்தொழியட்டும். தமிழ் நாட்டுத் தமிழனுக்கு என்ன அக்கறை? கலைஞர் ஆட்சியில் கிடைத்த இலவச தொலைக் காட்சிப் பெட்டி பெற்று, சூரத் நமிதாவையும், மற்றும் பல்வேறு மாநில வெள்ளைத்தொல்களையும், கண்டு கைதட்டி மகிழட்டும். எந்தத்தமிழன் எங்கு செத்தால் இவர்களுக்கென்ன. இலவசப் பொருள் சமுதாயம் பெருகி வளரும்போது, மொழி உணர்வு, இன உணர்வு, மனித நேயம் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. தன்மானம் என்பது பேசுவதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே.




விருந்து முடிந்த பின் விழுந்த இலைகளை
நக்கிடும் நாய்க்கும் நாளொன்று கழியும்,
நாளைக்க கழிப்பதே நானிலப் பிறப்பெனில்........................





தலைவர் நெஞ்சுக்கு நீதி தேடி விட்டார். கழகங்களின் சாயம் மற்றுமொருமுறை முழுமையாக வெளுத்து விட்டது.







SPECIAL REQUEST

A SPECIAL REQUEST TO MY REGULAR READERS FROM DELHI AND ALL OTHERS:



WHY NOT PUT YOUR COMMENTS ON THE BOARD? THEY CAN HELP ME WRITE BETTER, MORE APTLY, AND MORE APPROPRIATELY.


MY ENDEAVOR IS TO BRING LIKE MINDED PEOPLE TOGETHER TO CREATE A PATRIOTIC INDIA! A COUNTRY WHERE OUR FUTURE GENERATIONS WILL LIVE IN PEACE, PROSPERITY AND WITH PRIDE.

சவாலுக்கு சவால்

பதின்மூன்றாம் தேதி தினமலர் படியுங்கள். மாவோவிஸ்டுகள் மூன்று மாநிலங்களில், மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து நேர் சவால் விட்டுள்ளார்கள். அதைத் தொடர்ந்து சாலைகளிலும், ரெயில் வழித் தடங்களிலும், கட்டிடங்களிலும், குண்டு வைத்து நாச வேலைகள் பல செய்துள்ளனர்.


அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சை கூர்ந்து கவனித்தால் ஒன்று நிச்சயம் புலப்படுகிறது. அவரது பேச்சு நம்பிக்கை மிக்கதாகத் தெரியவில்லை. அவருக்கு இந்நிலைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சரியான வழிகள் புலப்படுவதாகத் தோன்றவில்லை. நிலைமை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் இன்னும் மோசமடைந்துவிடும் போல் அச்சம் தோன்றுகிறது. மூன்று மாநிலங்களில் மவோவிஸ்டுகள் விட்ட சவால், செய்த செயல்கள் என் அச்சத்தை உறுதி செய்கின்றன.


அது போகட்டும். இன்றைய இந்நிலைக்கு யார் பொறுப்பு? நாம்தான். நாம் தான் என்றால், நான், நீங்கள் ஒவ்வொரு இந்தியனும். இந்திய விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டுக் கிடந்தோம். விடுதலைக்குப்பின்னர், ஊழல் அதிகாரிகளிடமும், ஊழல் அரசியல்வாதிகளிடமும், ஏமாற்று வணிகர் களிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இது போதாது என்று, பேராசைக்கு அடிமைப்பட்டு வெட்கம் விட்டு, தன்மானம் துறந்து, ஊழல்வாதிகளின் அடி வருடிகிறோம். சுருக்கமாகச்சொன்னால், நாட்டுப் பற்று இழைந்து, கோழைகளாகி, நாம் அனைவரும் மிக மேதுவாகக் கொல்லும் தற்கொல்லி மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.


இதன் பரிணாம வெளிப்பாடுதான் மாவோவி்ஸ்டிகளும், நாக்சலைட்டுகளும், மற்றும் பல தேசிய விரோத அமைப்புகளும். பெரும்பான்மை மக்கள், பொறுமை என்ற பெயரில், மனோபலமின்றி, அநியாயங்களையும், மக்கள் விரோத செயல்களையும், சகித்துப் போவதையும், முடிந்தால் கூட்டு சேர்ந்து தன் சுய லாபம் பார்ப்பதையும், காணச் சகிக்காமல் வெகுண்டு எழும் ஒரு சிலர் இது போன்று இயக்கங்களில் இணைந்து தங்கள் உணர்வுகளை முன்னிறுத்துகிறார்கள்.


அவர்கள் எண்ணத்தால் தேச விரோதிகள் அல்ல. நமது அரசியல் அமைப்பும், அரசு அலுவல்களும், நீதித்துறை செயல்பாடுகளும், பெரும்பான்மை மக்களின் போலித்தனமும், அவர்களை இந்நிலையில் தள்ளியுள்ளன. இவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து ஒவ்வொரு இந்தியனும், தன் சுய லாபங்களுக்கு மேலாக, நாட்டை முன்னிறுத்தி நாட்டுப் பற்றை வளர்ப்பதுதான். நாட்டுப்பற்று மிகுந்த ஒரு சமுதாயம் உருவானால், பற்பல பெருமைகளும், லாபங்களும், ஒவ்வொரு இந்தியனையும் தானே வந்தடையும்.


படைப்போம் ஒரு புதிய சமுதாயம். ஜெய் ஹிந்த்!

பார்க்க வேண்டியதைப் பார்ப்பார்கள், கேட்க வேண்டியதை கேட்ப்பார்கள்

அண்ணே! அண்ணே! இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விடிவு காலம் பொறந்திடுச்சு அண்ணே!



எத்த வச்சு இப்படி சொல்ற நீ?



ஆமாண்ணே, தமிழகத்துக்காகவும், தமிழனுக்காகவுமே தங்களையெல்லாம் முழுமையா அர்ப்பணிச்சிக்கிட்ட தலைவருங்க எல்லாம், இலங்கை போயிருக்காங்க இல்ல.


சமயத்துல நீ ரொம்ப தமாசா பேசுறடா!


நான் சொன்னதில என்னண்ணே தப்பு?


நீ சொன்னது ஒண்ணும் தப்புன்னு சொல்ல முடியாது. இலங்கைல ஒரு இலக்கோட, விடுதலைப்புலிகள ஒழிச்சுக்க் கட்டறோம் என்கிற போர்வையில தமிழனத்த வேரோடு அறுக்க ராஜபக்சேயும் அவரோட ராணுவமும் முன்னாடி நின்னு செயல் பட்டப்போ நம்ம அரசியல் தலைவர்கள் எல்லாம் என்ன செய்திக்கிட்டு இருந்தாங்க?


என்னண்ணே செய்துகிட்டிருந்தாங்க?


பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள வேண்டா வெறுப்பா பல மணி நேரம், மனித சங்கிப் போராட்டம் என்ற பெயரில், வேகாத வெயிலிலும், மழையிலும் நிறுத்தி, ஏ. சி. வாகனங்களில் பவனி வந்து ஊக்கப்படுத்திக்கிட்டிருந்தாங்க. காலையில நாஸ்தாக்கும், மத்தியானம் சாப்பாட்டுக்கும் நடுவில கட்டில் மெத்தையில் படுத்து, ஏர் கண்டிஷனர்களுக்கு நடுவே உண்ணா விரதம் இருந்தாங்க. இதுக்கு நடுவுல எலெக்ஷன் வரவும், மாமனுக்கும் மச்சானுக்கும் சீட்டு புடிக்கரதுலையும், சீட்டு புடிச்சதும், வோட்டை வாங்கரதுலையும், அதாவது ஓட்டு வாங்கரதுலையும் பிசியா இருந்தாங்க. ஏன்னா, இலங்கைத் தமிழன் எங்க போறான், அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்க.



அது போகட்டும்ணே! இப்பாவாவது முயற்சி எடுக்கறாங்க இல்ல? அத்தப் பாராட்டாம பழசையே பெசறீங்கலேண்ணே!



பாராட்டலாம்டா! எண்ணமும், பேச்சும், செயலும் ஒண்ணா இருக்கறது மட்டுமில்லாம எப்பவுமே ஒண்ணா இருந்தா பாராட்டலாம்டா! நம்ம இந்திய, தமிழ் அரசியல்வாதிங்ககிட்ட இந்த நம்பிக்க எனக்கு இல்ல அத்தோட வுடு!



நல்லதே நடக்காதுங்கரீங்களா?



அப்படி எப்படி சொல்ல முடியும். நல்லது யாருக்குன்னு கேளு சொல்றேன்!



யாருக்குன்னு என்னண்ணே கேள்வி? இலங்கைத் தமிழர்களுக்கு தான்.



ராஜபக்சே என்ன கேனன்ன்னு நெனைச்சியா? காட்ட வேண்டியதக் காட்டுவான். அதுகள மட்டுமே காட்டுவான். ஒரிஜினல் பிளானுக்கும், ஆக்ச்சுவலுக்கும் வித்தியாசம் போனதுமே ஆரம்பிச்சிடுச்சு. பேச வேண்டியத மட்டுமே பேசுவான், பேச விடுவான். குடுக்கறத வாங்கிக்கிட்டு திரும்ப வருவாங்க. அதாவது அவுங்க குடுக்கற நியூச வாங்கிக்கிட்டு வருவாங்கன்னு சொன்னேன்.







Tuesday, October 13, 2009

நோபெல் பரிசும் சர்ச்சைகளும்

நோபெல் பரிசு ஒரு தமிழருக்குக் கெடச்சிருக்கே, நீங்க என்ன நெனைக்கிறீங்க அண்ணாச்சி?


ரொம்ப சந்தோசமான விஷயம் தான். இந்த நியூச பாத்த உடனே ரொம்ப சந்தோசமா இருந்திச்சு. ரெண்டு நாளைக்கு பொறகு ஒபாமாவுக்கு நோபெல் அமைதி பரிசு குடுத்து இருக்காங்கன்னதும் மனசுக்கு சங்கடமா போச்சு தம்பி.


ஏங்க அண்ணே? ஒபாமாவும் பெரிய மனுசரு தானே அண்ணே?


அது ஒண்ணுமில்லடா, அன்னை தெரசாவுக்கும், அதுக்கு அப்பால மைக் ஒபாமாவுக்கும் அதே விருதுன்னா மனசு ஒப்ப மாட்டேங்குது.


என்னே! இதெல்லாம் பெரிய பெரிய ஆளுங்க கோம்மிட்டீல கூடி தான முடிவு பண்ணுவாங்க, அதேப்படின்னே தப்பாகும்.


அதெல்லாம் வாஸ்தவம் தான். ஆனா நோபெல் பரிசு ஒண்ணும் சந்தேகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் அப்பாற் பட்டதல்ல. கடந்த அம்பது, அறுபது வருடங்கள்ள பல தவறுகள் நடந்திருப்பதா பெரிய பெரிய ஆளுங்களே நெனைக்கறாங்க. அது போகட்டும். அமைதின்னா உனக்கு யார் பேர் மொதல்ல ஞாபகம் வரும்.


அமைதின்னா, அஹிம்ச - அஹிம்சன்னா அண்ணல் காந்தி அடிகள்.



அவுரு பேர அஞ்சு முறை நாமிநேட்டு பண்ணி குடுக்காம வுட்டாங்க. கடைசியா அண்ணல் காந்தி அடிகள் சுட்டுக்கொல்லப் பட்டத்துக்கு ரெண்டு நாள் கழிச்சு முடிவு பண்றதா இருந்தாங்க. கிட்டத்தட்ட அவுரு பேரு முடிவு ஆயிடிச்சு . ஆனா இறந்தவருக்கு நோபெல் பரிசு இல்லன்னு கதைய மூடி அந்த வருஷம் யாருக்குமே தரல.


ஆச்சரியமா இருக்கு அண்ணே!



இதுல என்னடா இருக்கு ஆச்சரியம்! எல்லாமே மனுசங்க தானடா. மனித குலம் முதிர்ச்சி அடைய இன்னும் பல நூறாண்டுகள் ஆகணும்டா.




Monday, October 12, 2009

நம்ம ஊரு வெங்கிக்கு உலக மரியாதை

விஞ்ஞானி வேங்கடராமனுக்கு நோபெல் பரிசு கிடைத்ததுதான். ஒரு நொடி முடியலை. சிதம்பரத்துக்காரர். தமிழனுக்குக் கிடைத்த பரிசு என்று ஒரே கூச்சல். மற்றொருபுறம், குஜராத்தில் தலைப்புச் செய்தி "வடோதரா'ஸ் வெங்கி வின்ஸ் நோபெல்" என்று. நோபெல் கமிட்டீ சொல்லுகிறது "அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்" என்று. அவர் வசிப்பதோ அமெரிக்காவில்.



பிள்ளைப் பருவத்தில் பரோடா என்னும் வடோதரா சென்று பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் அங்கு முடித்து பின்னர் பயணித்தார் வெளி நாடுகளுக்கு. சிதம்பரத்திலும், சென்னையிலும் அவருக்கு எவாளவு பெரைத்தேரிந்து இருக்கும் என்று எனக்குத்தெரியாது. ஆனால் வடோதராவில் அவரை அறிந்தவர்களும், அவர் அறிந்து வைத்திருப்பவர்களும் பலர்.


சிதம்பரமோ, வடோதராவோ, இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஒரு இந்திய மண்ணில், இந்திய பெற்றோர்களுக்குப் பிறந்தவர். வாழ்க அவர் புகழ்!

எதிர்காலத்தில் நாத்திகம் - ஒரு கற்பனை

கடந்த இருபத்து வருடங்களில், நமது இந்தியா பல விஷயங்களில், குறிப்பாக விஞ்ஞானத்தில் பெரு வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் கூடவே சாதி வெறியும், சாதிக்கலவரங்களும், மடங்களும், அம்மடங்களுடன் இணைந்த சாமியார்களும், தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என்று எல்லா திசைகளிலும் வேகமாக வளர்ந்து நம்மை அச்சுறுத்தி இருக்கின்றன, அச்சுறுத்துகின்றன.


ஈசல் போன்று பெருகி வளர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும், அரசியல்வாதிகள் படுத்தும் பாடு போதாதென்று, இது போன்ற மடங்களும், சாமியார்களும் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. அரசியல்வாதிகளும், இச்சாமியார்களும் இணைந்து பல கொள்ளைகளை நமது இந்தியாவில் அரங்கேற்றியுள்ளனர். முடிவில் இவ்விரு குலத்தினருமே, மக்களை மேலும் மேலும் முட்டாள்களாக்கி மேலும் மேலும் அவர்களை கொள்ளையடித்ததைத் தவிர இந்த நாட்டிற்காக எந்த ஒரு நன்மையும் செய்ததில்லை.


இவற்றுக்கு விதி விலக்கானவர்கள் ஒரு சிலர். அவர்களைப் பிரித்துக்காட்டுவது, இப்பொழுது என்னுடைய நோக்கம் அல்ல.


சரித்திரத்தை உற்று நோக்கிப்பார்க்கையில் எனக்குத் தெளிவானது, நாத்திகமும், பகுத்தறிவுப் பாசறையும் ஒரு மடம் தான். அந்த மடத்தில் உருவான சாமியார்கள் பலர் அரசியலில் சக்கை போடு போட்டு, அவர்களின் விரிவான குடும்பங்களை செல்வச்செழிப்பில் கொண்டு தக்க வைத்திருப்பது, தன்மானத் தனிழன் ஒவ்வொருவனுக்கும் தெரிந்த விஷயம் தான். தன்மானத் தமிழனுக்கு மேலும் தெரியும், பெரியார் .வே.ரா. தொலை நோக்கு கொண்டு, பேசிய பேச்சுக்கள், செய்த செயல்கள், அவர் வாழ் நாளிலேயே பலருக்கு பணம் பண்ணும் பாசறையாகி விட்டது என்பது.


இந்த யோசனையில் உதித்தது ஒரு கற்பனை:


அம்மா! அம்மா! என் ஃபிரெண்டு ஒருத்தன் ராஜா மணி சாமின்னு பேரும்மா. பெரியார் சாமியையும், மணியம்மை அம்மனையும் அவன் கும்பிடராம்மா. இந்த ரெண்டு சாமிகளும் நாம ஏம்மா கும்பிடரதில்லே?


அவங்க வேற மதம்டா! நம்ம மதத்தில அந்த சாமிங்கள கும்பிடரதில்லே!


அதெப்படியம்மா? அவுங்களும் ஹிந்து மதத்த சேர்ந்தவங்கதானே? என்ன நம்மள மாதிரி விபூதில்லாம் பூசரதில்லே. நம்ம பெரிய புராணம் படிக்கிறோம், அவுங்க பெரியார் புராணம், தினம் நூறு பார்ப்பன வசவுகள் படிக்கிறாங்க. இது தானேம்மா வித்தியாசம்.


அதில்லடா. பெரியார் சாமி இந்த பூமில ஈ. வே. ராமசாமி நாயக்கரா அவதரித்த போது நாத்திக மதம்னு ஒரு மதத்த ஆரம்பிச்சாரு. அந்த மதத்துல இருந்தவங்களுக்கு, சில கடுமையான விதிகள் இருந்துச்சு. கருப்பு சட்ட போடணும், கருப்பு துண்டு போர்த்தனும், நெத்தில விபூதி, குங்குமம் இதெல்லாம் இடக்கூடாது. பெண்கள் கல்யாணம் ஆனாலும், ஐயற கூப்பிட்டு, ஹோமம் வளக்கறது, தாலி கட்டறது இதெல்லாம் கூடாது.


கல்யாணத்துல பின்ன வேற என்னம்மா செய்வாங்க?


அதுவா! பெரியார் சாமியோட பக்தர் யாரையாவது கூப்பிட்டு அவர் தலைமையில கல்யாணத்த நடத்துவாங்க. அந்த பக்தரும், ஒரு அரை மணி நேரம் பார்ப்பன வசவுப்பேச்சு, கடவுள் இல்லை பேச்சு பேசி கல்யாணத்தை முடித்துக் கொடுப்பார்.



ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருக்கு - இன்னும் சொல்லுங்க அம்மா



தலைக்கு மேல வேல இருக்குடா. அடுத்த ஞாயித்திக்கிழம மத்தியானம் வீட்ல தான இருப்ப அப்ப சொல்றேன்



Saturday, October 10, 2009

நல்லதை எழுது

நான் சொன்னது "கெட்டதை எழுதுகிறேன், நல்லவை நடக்க எழுதுகிறேன்"


சந்தேகம் இருந்தால் இன்று தினமலர் செய்தித்தாளை எடுத்துப் படித்துப் பாருங்கள். மூன்று சதவித மக்கள், இந்நாட்டில் கொள்ளை கொள்ளையாக கறுப்புப்பணத்தை அமுத்துகிறார்கள். இதில் பெரும்பாலோர், ஊழல் அரசு அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள், மற்றும் அவர்களோடு கைகோர்த்து நாட்டிற்கு இன்னலூட்டும் வியாபாரிகள். இதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஐந்து சதவிகிதத்திற்கு இணையாக குறைத்து விடுகிறார்கள்.


அதன் உண்மையான வெளிப்பாடு எங்கே என்று கேளுங்கள். நாம் அன்றாடம் உண்ணும் அரிசியிலும், பருப்பு வைகைகளிலும், ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கிறது.



கூட்டிக் கழித்துப் பார்த்தால், நமது இந்திய நாட்டில், ஊழல் நடவடிக்கைகளை நாம் அறவே ஒழித்தால், சாமானிய மனிதனின் வாழ் நிலை பல படிகள் உயரும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், தினம் உழைத்து சம்பாதிக்கும் சாமானிய மனிதனின் வரவு குறைந்தது பதினைந்து சதவிகிதம் உயரும். அத்தியாவசிய செலவுகள் அதாவது உணவு, உடை, இருப்பிடம், வாகனம் வாங்கும் செலவு, பதினைந்திலிருந்து இருபது சதவிகிதம் குறையும்.



என்று நமது இந்திய மண்ணில் ஒவ்வொரு சாமானியனும் இதை உணர்கிறானோ, இதை உணர்ந்து வெகுண்டு எழுகிறானோ, அன்று, நாம் ஒரு புதிய சுதந்திரப் போராட்டத்திறகு தயாராகி விட்டோம் என்று கொள்.


நான் தயார்! நீ தயாரா? ஆனால் நினைவில் கொள் "Non Violence is the best form of Bravery"


நல்லதை எழுது

நம்ம ஃப்ரெண்டு ஒத்தன் - அவன நானும் விடாப்புடியா "தமிழன்பன் படிச்சியா, தமிழன்பன் படிச்சியா?" ன்னு நொய்க்க அவனும் தொந்தரவு தாங்காம படிச்சுட்டு
"பொறம்போக்கு! பொறுக்கி" அப்படின்னு கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பிச்சான்.




ஏன்டா, நல்ல விழயங்கள நான் எழுதறேன். என்ன ஏன்டா திட்டறே" என்று கேட்கவும், கை நீட்டாத குறையா
"எதுடா நல்ல விஷயம். நல்லவங்களப்பத்தி எழுதினா நல்ல விஷயம். எப்பப் பாத்தாலும், எடுபட்ட அரசியல்வாதிகளப்பத்தி எழுதறியே, எதுடா நல்ல விஷயம், வாய்ல வந்துடப் போவுது" என்று காய்ச்சினான்.




நான் சொன்னேன் "ஏன்டா, நல்ல விஷயத்தப் பத்தி நான் எழுதலையா! டெல்லி மெட்ரோ ரெயில் உருவாவதர்க்குக் காரண கர்த்தா ஸ்ரீதரன் பத்தி எழுதலையா."
"ஆமான்டா எழுதின, நீ எழுதி பத்து நாளைக்குள்ள பெரிய ஆக்சிடெண்டு ஆயி அவுருக்கும் டென்ஷன். ஏன்டா இப்படி பண்றே" என்று கண்டித்தான்.




சமீபத்தில் மேதகு அப்துல் கலாம் பேசியதாகக் கேள்விப்பட்டேன். அவ்வுரையில் அவர் இந்தியாவில் எவ்வளவோ சாதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், மற்றும் பல சாதனங்களும் இந்தியாவின் அவலங்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன. இது தவறு என்று.
யோசித்துப்பார்த்தேன். நான் இந்தியாவின், மற்றும் உலக அவலங்களைப் பற்றி மட்டுமே அதிகம் எழுதுகிறேன். ஏன்? தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

மறு எண்ணிக்கையில் ஜெயிச்சான் சின்னு

ரெங்க நகர் கிரிக்கெட்டு கேப்டன் தேர்தலும், சின்னு மறு எண்ணிக்கையில் ஜெயிச்சதும், நான் எழுத மறந்ததும்:
பத்து நாட்களுக்குப் பிறகு கிடைத்த தகவல் - கருவண்டு தங்கராசு சாரை திரைக்குப் பின்னே கொண்டு சென்ற நேரம் , சின்னாவின் அண்ணன், வெங்கி வீட்டுக்குப் போயி இருநூற்று ஐம்பத்து ரூபாய் பணமும், வெங்கியின் அம்மாவுக்கு ஒரு புடவையும் கொடுத்து சரி கட்டினதாகக் கேள்வி.

Thursday, October 1, 2009

கமிஷன் அடிச்சு காணாமல் போனார் கோமல் பட்டாச்சார்யா

எங்க ஊர்ல, அதுதான் மாந்துறைல ஷர்மீளா ஆன்டியத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. ஷர்மீளா ஆண்டி அவ்வளவு கலர், அவ்வளவு அழகு. வெங்கடேசன் மாமா பையன் ராமசுப்பு, வாலிப வயசுல ஒரு வேலையா கல்கத்தா போயிட்டு அங்க ஒரு மூணு நாலு மாசம் தங்கும்படியா ஆயிடுச்சு. அங்க கல்கத்தாவைச் சேர்ந்த ஷர்மீளா மேல லவ்ஸ் ஆயிட்டாரு. அதுக்குப்புறம், வெங்கடேசன் மாமா குடும்பத்தோட கல்கத்தா போயி, சத்தம்போடாம, பையனுக்கு ஷர்மீளாவோட கல்யாணம் பண்ணி மகனையும், மருமகளையும் மாந்துறைக்குக் கூட்டிட்டு வந்துட்டார்.


ராமசுப்புவும், ஷர்மீளாவும் மெட்ராஸ்ல இருந்தாங்க. மாசத்துக்கு ஒரு தடவையோ, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையோ வருவாங்க. வெங்கடேசன் மாமா குடும்பத்துக்கு மாந்துறையுலும், வாளாடியிலும், லால்குடியுலும் ஏகப்பட்ட சொத்து. எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருந்தவர் திடீர்னு ஒரு நாள் மண்டையப்போடவும், ராமசுப்புவுக்கும், ஷர்மீளாவுக்கும் பர்மெனேன்டா மாந்துறை வந்து செட்டில் ஆகும்படியா ஆயிடிச்சு.


இப்ப என்னவோ கல்கத்தா ஆன்டி, தமிழ்ப்பெண்மணி மாதிரி தமிழ்ல பொளந்து கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒருநாள் சமூக சேவை சங்கத்துல முடிவு பண்ணாங்க - பள்ளிக்கூட பசங்கள்லாம் லால்குடில ஸ்கூலுக்குப் போக பஸ் வாங்கலாம்னு. ஒடனே ஷர்மீளா ஆன்டி மும்முரமா இறங்கிட்டாங்க.


அவுங்களுக்கு தூரத்து சொந்தக்காரர், கோமல் பட்டாசார்யான்னு ஒருத்தர் இருக்கார். அவருக்கு, இந்த பஸ், காரு இதெல்லாம் வாங்கரதுல ரொம்ப வருஷ அனுபவம்னு. டிரங்கால் போட்டு பேசி ஊர் பெரியவங்க அவர வரவழைச்சாங்க. அருமையா பேசினாரு, இங்கிலீஷிலியும், ஹிந்தியிலும். அவுரு பேச்சு புரியாம நிறைய பேரு அவுரா உத்துப்பாத்துக்குட்டு தலையாட்டினாங்க.


அதுக்கப்பறம் என்ன நடந்ததுன்னு நான் சுருக்கமா சொல்றேன்.


எங்க சமூக சேவை சங்கத்துக்கு, புது பஸ்னு சொல்லி, சல்லிக்காசு பெறாத பழைய பஸ்சு ஒண்ண தள்ளி விட்டுட்டார். அதுக்கு கோமல் பட்டாச்சார்யா நெறையா கமிஷன் அடிச்சுட்டதா பேசிக்கிட்டாங்க. அவுருக்கு போன் போட்டுக்கேட்ட அவுரு சொல்றாரு "கல்கத்தாவுக்கு நீங்க வந்து என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்றேன்' .


ஒரு வழியா செலவழிச்சது போரும்னு எங்க சமூக சேவை சங்கம் கேசைத் தூக்கிக் கிடப்பிலே போட்டுடுச்சு.


Wednesday, September 30, 2009

விபத்து மிகப்பெரியது




வருடம்: 1982




இடம்: திருச்சி டவுன் ஏரியாவுல தெப்பக்குளத்துக்கும் பர்மா பஜார் கடைகளுக்கும் இடையே நடந்து, புள்ளையார் கோவில் தாண்டி, மாயவரம் லாட்ஜுக்கும், மதுரா லாட்ஜுக்கும் இடையே உள்ளே முக்கு.




சுதாகர் வேகமாக ஓடி வந்தான். மூச்சு இரைக்க இரைக்க, "அண்ணே! ஆக்சிடெண்டு ஆயிடுச்சு அண்ணே, நீங்க வந்து கொஞ்சம் அவுங்கள்ட்ட பேசி என்னோட வண்டிய மீட்டுக்கொடுத்துடுங்க அண்ணே" என்று சொல்லி முடித்தான்.






நானும் நெஞ்சை நிமிர்த்தி, லாவகமாக, மீசையை முறுக்கி விட்டபடி அவனுடன் நடந்தேன். ஐந்து அடி செல்லவும், எனக்கு ஞாபகம் வந்தது. சுதாகருக்கு வண்டி ஓட்ட தெரியாதே. அவன் கிட்ட ஒரு டூ வீலர் கூட கிடையாதே. பிரச்சனை என்ன என்று யோசித்தேன். இருந்தாலும், அவனிடம் கேள்வி கேட்டால், நான் பயப்படுகிறேன் என்று நினைத்து விடுவானோ என்று தோன்றியது. எனவே கேள்வி எதுவும் கேட்காமல் அவனுடன் வேகமாக நடந்து ஆண்டாள் தெருவில் நடந்தேன்.






மதுரா லாட்ஜு தாண்டி, ஒரு பத்தடி போயிருப்போம். மலைக்கோட்ட கோவில் யானை நின்னு வேகமா தும்பிக்கைய ஆட்டிக்கிடுக்கிட்டுருந்தது. அது மேல யானைப் பாகன் உக்காந்திருந்தாரு.




சுதாகரைப் பார்த்ததும், "சாரை சப்போர்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கிறீயா?" என்று கேட்கவும் நான் ஆச்சரியத்துடன், கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இருபது வயசு இளைஞன் சுதாகரைப் பார்த்தேன்.




நடந்தது என்ன என்று நான் விவரிக்கிறேன். சுதாகருக்கு இது வரைக்கும் சைக்கிள் ஓட்டக்கூட தெரியாது. இப்பதான் பழக ஆரம்பிச்சுருக்கான். கொஞ்சம் தையிரியம் வரவும், ஆண்டாள் தெருவிலிருந்து, மலைக்கோட்டை பக்கம் செல்லும், சரிவுப்பாறையில் ஏறியிருக்கிறான். திரும்ப இறங்கும்போது வண்டி வேகம் பிடித்து விட்டிருக்கிறது.




ஆண்டாள் தெருவில் அந்தப்பக்கம் நிக்குது யானை. அரண்டு மிரண்டு, விட்டான் நேரே சைக்கிள - யானை ஆட்டிக்கிட்டுருந்த தும்பிக்கைக்கும் கால்களுக்கும் நடுவே. சுவற்றில் சைக்கிளை மோதி யானையின் காலுக்காருகே விழுந்தான் சுதாகர்.




யானைப்பாகன் கேட்டார் : "என்னாப்பா பட்ட்டப்பகலுல, இவ்ளோ பெரிய யானை நிக்கறது உன் கண்ணுக்குத் தெரியல?"




எழுந்து நின்ன சுதாகர் சொன்னான் "யானை நல்லாத்தெரியுதுப்பா. சைக்கிள்ள பிரேக்கு எங்கன்னுதான் தெரியல"




யானைப்பாகன் கிட்ட பேசி, சுதாகர் சைக்கிள மீட்டுக்கொடுத்த கதை வெறும் கொசுறு.


இந்தியாவின் சிறைக்கைதிகள்



அப்பா: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

தாத்தா: அதிகம் இருக்கறது நம்ம நாட்டு சுதந்திரத்துக்காக போராடரவ்ங்க. சில குற்றவாளிகளும் இருப்பாங்க, திருட்டு, பிக் பாக்கெட் அந்த மாதிரி குற்றங்களுக்காக.

நான்: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

அப்பா: குற்றம் செய்து பிடி பட்டவர்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு இது மாதிரி பற்பல குற்றங்கள்.

என் மகன்: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

நான்: முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள், பெரிய பெரிய கம்பெனி உயர் அதிகாரிகள், பெரிய பெரிய டாக்டர்கள், வக்கீல்கள், சார்டெட் அக்கௌண்டண்டுகள், ஆசிரியர்கள், பிரின்சிபால், முன்னாள் மந்திரிகள், அவங்களோட மகன்கள். சுருக்கமா சொல்லணும்னா, இப்ப இருக்கற ஜெயில்ல, அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிலேருந்து அசெம்ப்ளி, பார்லிமென்ட் வர எதுவேணும்னாலும் நடத்தலாம்.

Monday, September 28, 2009

மறு எண்ணிக்கையில் ஜெயிச்சான் சின்னு!

வருடம்: 1968


இடம்: தென் தமிழ்நாட்டில் ஒரு சிற்றூர்



ரெங்க நகர் கிரிக்கெட் கிளப்பின் கேப்டன் தேர்தல்



அப்பொழுதெல்லாம், ரெங்க நகர் கிரிக்கெட் கிளப்பில் தேர்ந்த வீரர்கள் பலர். எனவே கேப்டன் பதவிக்கு கடுமையான போட்டி. ஐந்து பேர் பெயர் அடிபட்டது. எனவே முடிவு எடுத்தோம், எலெக்க்ஷன் வைத்து தேர்ந்தெடுப்போம் என்று.



ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு எலெக்க்ஷன். மொத்தம் முப்பது ஓட்டுக்கள். இந்த முப்பதுல இருபது பேர் ஸ்பான்சர்ஸ் - அதாவது பேட்டு வாங்க பந்து வாங்க பணம் கொடுத்த பெற்றோர்கள்.



கேப்டன் எலேக்க்ஷனுக்கு நின்னது நாலு பேரு. சுப்பு, வெங்கி, ஜிங்கா மற்றும் சின்னு. எலெக்க்ஷன் ஆஃபீசர், ரெங்க நகர் பள்ளி தலைமை ஆசிரியர். பத்து நாளைக்கு முன்னரே பிரச்சாரம் சூடு பிடித்து விட்டது. எலெக்க்ஷனுக்கு முன்னர் வதந்தி கிளம்பிவிட்டது. சுப்பு, வெங்கடாசலம் அப்பாக்கிட்ட, அவுரு பையனுக்கு ஓப்பனிங் பாட்டிங் தருவேன்னும், ஸ்ரீதர் அப்பாக்கிட்ட கொறஞ்சது அஞ்சு ஓவர் ஸ்ரீதருக்குத் தருவேன்னும் பிராமிஸ் பண்ணதா பேச்சு.



ஜிங்கா ஓட்டுரிமை உள்ளவங்க எல்லார் வீட்டுக்கும் காலங்காத்தாலா இலவசமா பால் சப்ளை பண்றதா பேச்சு.


எலெக்க்ஷன் முடிந்து ஓட்டெண்ணிக்கையும் முடிந்தது. தலைமை ஆசிரியர் திரை மறைவிலிருந்து வெளியே வந்து வெங்கி ஜெயுச்சிட்டான்னார். எல்லோரும் கரகோஷம் எழுப்பவும், வெங்கி குதித்து குதித்து ஆடவும், திடீரென்று வேகமாக உள்ளே ஓடிவந்தான் கருவண்டு. கருவண்டுவைக்கண்டதும், பயந்து நடுங்கி ஆட்டத்தை நிறுத்தி ஒதுங்கினர்.


தலைமை ஆசிரியர் தங்கராசுவின், கை கால்கள் வெட வெடவென்று நடுங்கியது. அவர் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, திரைக்குப்பின்னே சென்றான் கருவண்டு. ஐந்து நிமிடத்துக்குப் பின் வெளியே வந்த தங்கராசு சார், வோட்டு திரும்ப எண்ணிப்பாத்தோம், வெங்கி மூணு ஓட்டுல தொத்துட்டான், ஜெயிச்சது சின்னு தான் அப்படின்னு ஒரே போடு போட்டார்.


பின்னாடியே வந்த கருவண்டு, சொல்லிட்டாருல்ல, கெளம்புங்க எல்லாரும், சின்னு தான் கேப்டன், என்று சொல்லவும், எல்லோரும் நிசப்தமாக கெளம்பினார்கள்.


அதுக்கப்புறம் ஒரு நாள், வெங்கி, இந்த எலெக்க்ஷன் ஒரு ஃபிராடு. என்னை எமாத்திட்டாங்கன்னான். சின்னியோட அப்பா சொன்னாரு "தோத்தவங்க ஏமாத்தத்துல இந்த மாதிரி பேசறது சகஜம்னு"


அதுக்கப்பறம், கிரிக்கெட்டு அனுபவமே இல்லாத கருவண்டுவுக்கு டீம்ல இடம் கெடச்சது வேற விஷயம்.

Wednesday, September 23, 2009

வேஷதாரிகளின் பேராசை அரசியல்

பிரமோத் மகாஜன் என்னும் அரசியல்வாதி. பாரதிய ஜனதா பார்ட்டியைச் சேர்ந்தவர். இளமை, உற்சாகம், வேலையில் தீவிரம், புத்திசாலித்தனம் என்று அசத்திக்கொண்டிருந்தார். அவரை பார்க்க, அவர் பேச்சை கேட்க, எனக்குள் ஒரு பேராசை. இந்தியாவுக்கு ஒரு சிறந்த தலைமை சீக்கிரம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
அன்று பிரமோத் மகாஜன் அவரது சகோதரனால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு பெரும் துயரம் கொண்டேன். என் நம்பிக்கை, எதிர்பார்ப்பு பொய்யானது கண்டு பதை பதைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு, அவர் தம் அருமை மகன் ராகுல் மகாஜனைப் பற்றிப் படித்தேன். இது போன்ற அப்பாவுக்கு இவ்வளவு கேவலமான மகனா என்று வியந்தேன்.
மேலும் மேலும் செய்திகள் திரட்டினேன். அவரைப்பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும் கூர்ந்து கவனித்தேன். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவரிடமும் உரையாடினேன்.
இன்று அமைதியாக அமர்ந்து யோசித்துப் பார்த்தால் புரிகிறது, மற்றும் ஒரு பசுத்தோல் போர்த்திய புலியை கண்டு ஏமாந்தது. என்று விடியும் இந்திய சுதந்திரம் இதுபோன்ற இன்னும் பற்பல வேஷதாரிகளின் பேராசையில் ஊன்றிய, பொறுக்கித்தன அரசியல் அடாவடிகளிலிருந்து.
வாழ்க இந்திய! வளர்க சுதந்திரம்!

சாமானியர் வகுப்பு

அண்ணாச்சி! தரூர்னு ஒருத்தரப்பத்தி ரொம்ப பேச்சு அடிபடுதே, அவுரு யாரு அண்ணாச்சி?


ஒனக்கு என்ன தெரியும்? அதச்சொல்லு மொதல்ல!


எனக்கு தெரிஞ்சதெல்லாம் இதுதான் அண்ணாச்சி. அவுரு ஒரு சென்ட்ரல் மினிஸ்டரு. சோனியா அம்மா, எல்லாரும் சிக்கனமா செலவு பண்ணனும். சாமானிய வகுப்புலதான் போகணும்னு சொல்ல, இவுரு, சாமானிய வகுப்புன்னா கால்நடைகள் வகுப்புன்னு ஏதோ சொல்லுப்புட்டாறு. அம்புட்டுக்கிட்டாறு, தும்பிட்டிக்கா பட்டாரு. பெரிய பெரிய அரசியல் வாதிகள்லேருந்து, டீக்கடை பய்யன் வரைக்கும் எல்லாரும் பிடி பிடின்னு அது.
அது ஒண்ணுமில்ல தம்பி. ஏதோ தமாசா எழுதினாரு. சிரிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கணும். சும்மா ஊதி ஊதி பெருசா ஆக்கிட்டாங்க. ஏன்னா, எல்லா விஷயங்கள்ளையும், அவுனுக்கு என்ன லாபம்னு பாப்பான் அரசியல்வாதி. இதப்பாத்து சாமானிய மனுஷன் ஏமாறக்கூடாது.
நீங்க சொல்றத நூத்துக்கு நூறு ஒப்புக்கறேன் அண்ணாச்சி! ஆனா சாமானிய வகுப்பப்பத்தி சொன்ன தரூர் அண்ணன், தான் உங்காத்திருக்கற பார்லிமேன்டப்பத்தி ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறாரு. இவரோட அங்க உங்காத்திருக்கரவுங்கள்ள கிரிமினல் குற்றங்களுக்காக கைதாகி, தண்டனை பெற்று, பெயிலில் வெளியே வந்தவங்கன்னு கூட்டமே இருக்கே அண்ணே, அதப்பத்தி அவுரோட அபிப்பிராயம் என்னன்னு கேட்டு சொல்லுங்க அண்ணே!

Friday, September 18, 2009

வாயில வருது!

தரூர், தரூர் னு ஒரு அரசியல்வாதி. இவுரு ஒண்ணும் வயசான சக்கர நாற்காலி, அல்லது ஊன்றுகோல் அரசியல் வாதி இல்ல. தெருப்போறுக்கியா சுத்திக்கிட்டு இருந்து ரெண்டு மூணு கொலை கேசுல மாட்டி வெளில வந்த ரெகுலர் அரசியல்வாதி இல்ல.




ரொம்ப படிச்ச புத்திசாலி அரசியல்வாதி. இப்பத்தான், இப்பத்தான் வெளிநாடு உறவுகள் துறையில வேல பண்ணது போதும். நம்ம நாட்டு மக்களுக்காக இனிமே முழுசா பாடு படணும்னு முடிவு பண்ணி, காங்கிரசுல தன்னை இணைச்சுக்கிட்டாறு. சிங்கு அண்ணன், சரி போகட்டும், படிச்சவரா இருக்காரே உதவியா இருக்கும்னு, எலெக்சன்லையும் நிக்க வச்சாரு, மந்திரி பதவியும் போட்டு குடுத்தாரு.




தரூர் அண்ணாச்சியும், சரி! இந்தியாவுல ஏழை எளிய மக்களுக்கு பாடு படறத்துக்கு நல்ல வாய்ப்பு கிடச்சிடிச்சுன்னு அஞ்சு நட்ச்சத்திர ஓட்டல்ல உங்காந்துக்கிட்டு தேமேன்னு வேலைய பாத்துக்கிட்டிருந்தாரு. இந்த சோனியா அம்மா சும்மா இல்லாம 'எளிமை' அது அதுன்னு பேஜாரு பண்ணி, ஒட்டல காலி பண்ணும்படியா ஆயிடிச்சு. அது போதாதுன்னு இனிமே நம்ம எல்லாரும் பிளேன்ல சாதாரண வகுப்புல தான் போணும்னு சொல்லிட்டு அதே மாதிரி போகவும் ஆரம்பிச்சிட்டாங்க மிநிஸ்டருங்க.




தரூர் நாக்குல சனி. சாரி! தரூர் பேனால சனி. சரி, கால்நடைகள் போற வகுப்புல, பசுமாடு கூட்டத்தோட நானும் போறேன்னு, நக்கலா சொல்லிப்புட்டாரு - எழுதிப்புட்டாரு.




இதைக்கேட்டதும், எங்க பக்கத்து வீட்டு மாமா, சங்கர நாராயணன், பயங்கர கோபமாயிட்டாறு. ஏன்னா, அவுரும் அடிக்கடி, பய்யன பாக்கறேன், பொண்ண பாக்கறேன், பேத்திக்கு ஒடம்பு சரியில்லன்னு ஃபிளைட்ட புடிச்சுடுவாறு. இப்போதைக்கு தரூர புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு.





"அகராதி! அகராதி! படிச்சு பெரிய பதவில இருந்தா மட்டும் போறாது. பணிவு வேணும். நாவடக்கம் வேணும். சொல்லுடா, தன் நாக்க கன்ட்ரோல் பண்ண முடியாதவன் என்ன பண்ணி கிழிச்சுடுவான். அவனோட ஃபோன் நம்பர் எங்கிட்ட இருந்தா காசு போனா போறதுன்னு, கால் போட்டு கிழிச்சுடுவேன்!"





அவர சமாதானம் பண்றதுக்குள்ள போதும்னு ஆயிடிச்சு. மெதுவா பையன்ட்ட கேட்டேன் "நீ என்னடா சொல்ற தரூர் கருத்தப்பத்தி?" அவன் சுருக்கமா சொன்னான்: "வாயில வந்துடப்போவுது உடுங்கப்பா!"

Tuesday, September 15, 2009

பெருக்கெடுத்து ஓடும் புரட்சி

உத்தரப் பிரதேசத்தில் நோய்டா என்று ஒரு நகரம். தில்லி மாநகரை தொட்டடுத்த ஊர். கடந்த இருபது வருடங்களில் பெரு வளர்ச்சி அடைந்த நகரம். இங்கு பல மாநிலங்களிலிருந்து வந்த பல வகுப்பு மக்கள் வாழும் ஒரு உயர் நகரம். மக்களின் உழைப்புக்கு உதாரணம் இந்நகரின் வளர்ச்சி.


அவங்க, லட்சக்கணக்கான மக்கள், உழைத்து சம்பாதித்து கட்டிய வரிப்பணத்தை நல்ல முறையில் செலவிடவேண்டாமா? அதுக்காகவே தன் வாழ்கையை அர்ப்பணித்த, அர்ப்பணிக்கும் அக்கா மாயாவதி, இரண்டாயிரத்து இருநூறு கோடி ரூபா செலவழிச்சு புரட்சி பண்ணப்போறாங்க.
இந்தப்புரட்சி ஒண்ணும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் தெரியாத புரட்சியில்ல. தமிழ் நாடு இப்புரட்சில ஒரு முன்னோடி. வழிகாட்டி. சிலை புரட்சி. செத்தவங்க, இன்னும் சாகாம இருக்கறவங்க எல்லாருக்கும் சிலை வக்கிறதுக்காக இரண்டாயிரத்து இருநூறு கோடி ரூபா.
"இம்புட்டு ரூபா இருந்தா எவ்வளுவு லட்சம் பேரு எவ்வளுவு நாளைக்கு சாப்பிடலாம்". "பல ஆயிரம் பேருக்கு வேலை குடுக்கற மாதிரி தொழில் ஆரம்பிக்கலாமே" அது இதுன்னு புத்திசாலித்தனமா பேசறதா சில பேரு நெனைக்கிறாங்க. சாப்பாடு எப்பவும் இருக்குப்பா. சரித்திரம் தெரிய வேண்டாமா? வரும் சந்ததிகளுக்கு?
அப்படி என்னையா சரித்திரம்? அரசியல்வாதிகள்னு ஒரு சமூகம் இருந்தது. ஆங்கிலேயர்ட்ட இருந்து இந்தியா சுதந்திரம் வாங்கினதும், மழைக்காலத்துல கெளம்பற விட்டில் பூச்சி மாதிரி பொறந்த ஒரு சமூகம். விட்டில் பூச்சியாவது போகட்டும், ஒரு ரெண்டு மணி நேரம் பறந்துட்டு பொசுக்குனு போயிடும். இந்த பூச்சி சமூகம் இருக்கே, இது ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு, கடசில மனுஷன கடிச்சு ரத்தம் பூரா உறிஞ்சிடும். மனுஷ உருவத்துல பொறந்தாலும், நரியாகி, ஓனாயாகி, நாட்டையே கொள்ளையடிச்சு, தனது விரிவான குடும்பங்களுக்கு சொத்து சேத்த, வெக்கம் கெட்ட சமூகம்னு தான் நம்ம சந்ததிகள் பேசும். இதுதான் வருங்கால உண்மை.

Sunday, September 6, 2009

இந்தியாவில் எதுவும் நடக்கும்

அண்ணாச்சி! இந்தியாவிலேயே பணக்கார குடும்பம் எது அண்ணாச்சி?



பல பேரு தோணுது, ஆனா என்னால குறிப்பா சொல்ல முடியாது கண்ணா. ஏன்னா எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது.


சும்மா, ஒரு குத்து மதிப்பா சொல்லுங்க அண்ணே. முதல் இடம் தெரியாட்டாலும் பொதுவா சொல்லுங்க அண்ணே.



எவ்வளவோ பெரிய பெரிய தொழில் குடும்பங்க இருக்கு, டாட்டா, பிர்லா, அம்பானி, மிட்டல், இதெல்லாம் வடக்கே - தெற்கே சொல்லணும்னா டி.வி.எஸ். குடும்பம், எம்.ஆர்.எஃப், விப்ரோ, இனஃபோசிஸ், சங்கர் சிமெண்ட்ஸ், இது மாதிரி நிறைய குடும்பங்கள் இருக்கு. இந்த குடும்பங்கள்ல பெரிய குடும்பங்கள்னா, பணத்தால மட்டுமல்ல. பல பெருமைகள் உண்டு. சின்ன அளவுல கம்பெனி ஆரம்பித்து, தங்களோட நேரம், சுதந்திரம் அம்புட்டையும் தியாகம் செஞ்சு உருவாக்கினாங்க. அது மட்டுமல்ல, நாட்டுல லச்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்கினாங்க. இந்த கம்பெனிகளெல்லாம் உண்டாக்கினவங்களப் பாத்தா கையெடுத்து கும்பிடணும். பல ஆயிரம், சொல்லப்போனா பல லட்சம் குடும்பங்களுக்கு கடவுள் மாதிரி. அது சரி, இதெல்லாம் நீ எதுக்கு கேக்கிற?




அதுல்லண்ணே. ஒரு நியூஸ் படிச்சேன். மாயாவதின்னு ஒரு அம்மா 2007 -2008 ல அம்பானி, அது யாருண்ணே, முகேஷ் அம்பானி, அவுர விட அதிகமா வருமான வரி கட்டுனாங்களாம்மா. அவுங்க கம்பெனி பேரு என்னண்ணே? அவுங்க எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை போட்டு குடுத்திராக்கங்கண்ணே.


முட்டாள்! முட்டாள்! அவுங்க கம்பெனி நடத்தலடா. உத்தரப்பிரதேச முதல் மந்திரி. பகுஜன் சமாஜ் பார்ட்டி கட்சித்தலைவி.


பின்ன எப்படிண்ணே? புரியலையே. இந்த கட்சி எப்ப ஆரம்பிச்சுதண்ணே?


இந்த கட்சிய கன்ஷி ராம் ங்ரவரு, 1984 ல ஆரம்பிச்சாரு. அரசு அலுவலகத்துல குமாஸ்தாவா இருந்தாரு மாயாவதியோட அப்பா. பள்ளி, கல்லுரிகள்ள மாணவர் தலைவியாக இருந்து அரசியல்ல நுழைஞ்சாங்க.


அடேங்கப்பா! கம்பெனியே ஆரம்பிக்காம, முதலீடே பண்ணாம இவ்ளோ பணமா? எப்படிண்ணே இம்புட்டு பணம் வந்திச்சு?



அய்யரு பாஷைல சொல்லணும்னா - அபிஷ்டு, அபிஷ்டு, அதுதாண்டா அரசியல். இந்திய அரசியல்ல எதுவேணாலும் நடக்கும். ஏன்னா, மத்த நாட்டு மக்கள்ட்ட அதிகமா இருக்கிற ஒண்ணு, கொஞ்சம் கூட கிடையாது நம்ம கிட்ட.
என்னன்னே அது?
அதுவா? அது பேரு தேசப்பற்று!
ஊழல் அரசியல்வாதிகள் , ஊழல் அரசு அதிகாரிகள், அதுக்கு மேலா உணர்வற்ற, வெட்கங்கெட்ட, கோழைகளாகிய நாம். பொது மக்கள். அதாவது நானும் , நீயும்.

வாழ்க இந்தியா ! மீண்டும் வளர்க தேசப்பற்று!

Monday, August 31, 2009

அம்புட்டுகிட்டாறு தும்பிட்டிக்கா பட்டரு...

எசகு பிசகா மாட்டிக்கிட்டா எங்க ஊர்ல சொல்லுவாங்க அம்புட்டுகிட்டாறு தும்பிட்டிக்கா பட்டருன்னு. அதுக்கு சத்தியமா இது வரைக்கும் எனக்கு அர்த்தம் தெரியாது. ஆனா இன்னிக்கு கோயம்பத்தூர் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் பத்தி செய்தி படிச்சதும் அம்புட்டு...................................... தான் எனக்கு ஞாபகம் வந்தது.

மேல படியுங்க முழுசா புரியும்.

ஊர்: ஸ்ரீரங்கம், விலாசம்: காந்திநகர், வருஷம்: 60 - 65 மாதங்கள்: ஏப்ரல் - ஜூன்

கிழமை: ஞாயிறு முதல் ஞாயிறு வரை நேரம்: மதியம் சுமார் ஒரு மணி

குமார்: வாங்கடா, நேரா எல்லாரும் ஹோ அண்ட் கோ மாமியாத்துக்கு போலாம்.

வெங்கடேஷ்: ஆமாண்டா, அது தாண்டா சரி, நேத்தே நான் பாத்தேன், மாங்காஎல்லாம் முத்திப் போச்சுடா. இன்னும் ரெண்டு நாள் உட்டா பழுத்துடும், அப்புறம் மாமியே பரிச்சுடுவா. நமக்கு கெடைக்காது.

சுரேஷ்: இந்த தடவ நான் மரத்துல ஏற மாட்டேன். நான் வேணா காம்பவுண்டுக்கு வெளில நின்னு காட்ச் புடிக்கறேன்.

ராசு: அதெல்லாம், அங்க போய் பாத்துக்கலாண்டா.

குமார்: சரிடா! ராகவா, நீ வீட்லேர்ந்து ஒரு சின்ன கத்தியும், கொஞ்சம் உப்பும் எடுத்திக்கிட்டு நேரா வெங்கடேஷ் வீட்டு மாடிக்கு வந்திடு.

நாங்க நாலு பெரும், துணைக்கு தமிழன், கருவண்டு, குண்டன் துணையோட ஹோ அண்ட் கோ மாமியாத்துக்கு படை எடுத்தோம்.

அவர்கள் வீட்டை அடைந்ததும் குமார், எங்கள் எல்லோரிலும் பெரியவன் எல்லோருக்கும் அவரவர் பங்கை விவரிக்க ஆரம்பித்தான். குண்டன், பாட்ராச்சாரியார் வீட்டுப் பக்கம். அங்கிருந்து கொண்டுதான் மரத்தின் உச்சியிலிருந்து வீசி எறியப்படும் மாங்காய்களை லாவகமாகப் பிடிப்பான். தமிழன் அவன் பின்னாடி நின்னு எண்ணி கூடையில எடுத்து வைப்பான். கருவண்டு, தெருவுல வேற யாரும் வந்தா கவனமா இருந்து குரல் கொடுப்பான்.

குமார் குனிஞ்சு நிக்க, அவன் முதுகு மேல ஏறி வெங்கடேஷ் சுவத்துக்கு வெளியில வளந்திருக்கிற கிளைய புடிச்சு குரங்கு மாதிரி தாவி மரத்துல ஏறுவான்.

சுரேஷுக்கு வேலை வெளிக்கதவுக்கு பக்கத்துல நின்னுக்கிட்டு மாமி வெளிய வந்த குரல் கொடுக்குற வேலை. சுளுவான வேலை. ஏன்னா மாமி சாப்பாடு சாப்டுட்டு அசந்து தூங்கற நேரம்.

ஏழெட்டு முத்தின மாங்கா சேர்ந்திருக்கும்.

வெங்கடேஷ் மர உச்சிலேருந்து லேசா குரல் குடுத்தான். டேய்! நாலஞ்சு பழம் இருக்குடா.

குமார் பதிலுக்கு சொன்னான் - தூக்கி எறியாதடா, கெட்டுப்போயிடும், சட்டையை கயட்டி அதுல கட்டிக்கோ.

வெங்கடேஷ் சொன்னபடியே செய்தான்.

சுரேஷ் கவனமாக வீட்டு வாசற்புறம் இருந்த தோட்டத்தை பாத்துக்கிட்டு இருந்தான். திடீர்னு, வீட்டு பின் பக்கத்திலேருந்து யாரோ வர மாதிரி நிழல் தெரிந்தது. உணர்வதற்கு முன்னர் மாமி மரத்தடியில் நின்றிருந்தாள்.

சுரேஷ் மாமி என்று கத்தவும், வெங்கடேஷ் கழட்டிய சட்டையில் மாம்பழத்துடன் இறங்கும்போது, பிடி தவறி, மாமியின் காலடியில் தொப்பென்று விழுந்தான். அவன் கழுத்தைப்பிடித்து தூக்கினாள் மாமி.

சுரேஷ், ராசு, குமார், குண்டன், தமிழன், கருவண்டு எல்லோரும் பறந்து மறைந்தனர், அம்புட்டுகிட்டாறு, தும்பிட்டிக்கா பட்டாரு.............................